ஏ.பி.வி.பி ஜே.என்.யு கண்காட்சி

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏ.பி.வி.பி) ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர் பிரிவு, 1990ம் ஆண்டு காஷ்மீரில் காஷ்மீரி ஹிந்துக்களின் படுகொலை மற்றும் வெளியேற்றம் குறித்து ஜே.என்.யு மாணவர்களின் பார்வைக்காக ஒரு அற்புதமான கண்காட்சியை வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான ஒரு இணையவழி வெகுஜன உரையாடல் நிகழ்ச்சியையும் ஏ.பி.வி.பி ஏற்பாடு செய்தது. தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான சிறப்பு மையத்தின் உதவி பேராசிரியர் ஆயுஷி கேட்கர் இதை விரிவாக விளக்கினார். ஏ.பி.வி.பி’யின் ஜே.என்.யு தலைவர் சிவம் சௌராசியா கூறுகையில், “பல்கலைக்கழகங்களில் இருந்து ஹிந்துக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் கல்வி உலகில் இருந்து திட்டமிட்டு புறக்கணிகப்பட்டது” என்றார்.