லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கும் வீடியோ

ஈத் உல் பித்ரை முன்னிட்டு மலையாள நடிகர்கள் சுமி ராஷிக் மற்றும் விஷ்ணு கே விஜயன் ஆகியோர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவிக்கும் ஈத் சிறப்பு இசை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். விஷ்ணு கே விஜயன், சுமி ராஷிக் ஆகியோர் தங்களது சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில், ஹிந்து, கிறிஸ்தவ பெண்களை போலை காதல் வலையில் வீழ்த்தும் முஸ்லிம் ஆண்களின் லவ் ஜிகாத் அப்பட்டமாக காட்டப்பட்டுள்ளது. இது நெட்டிசன்களின் கோபத்தை ஈர்த்துள்ளது. வீடியோவில் அந்த பெண் அணிந்திருந்த தாவணிக்கு பதில் சல்வார் கமீஸ் உடையை அளித்து அணிந்து வர செய்கிறார். பிறகு அந்த பெண்ணின் நெற்றித் திலகத்தை நீக்கிவிட்டு துப்பட்டாவை அவரது தலையில் முக்காடு போல மாட்டி முஸ்லிம்மாக மாற்றுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. “இது மத மாற்றத்தை மகிமைப்படுத்துகிறது, முஸ்லிம் ஆண்களைத் திருமணம் செய்து கொள்வதற்காக ஹிந்துப் பெண்களை இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்வதை ஊக்குவிக்கிறது. இது ஹிந்துக்களைத் தூண்டும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட லவ் ஜிஹாத்தின் வெளிப்படையான குறிப்பு. இதை உருவாக்கியவர்கள் ஹிந்துக்களை வருத்தப்பட வைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளனர்” என பல தரப்பில் இருந்தும் இந்த வீடியோவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.