ஒரு மாநிலம் – ஒரு விளையாட்டு

பாரதத்தில் நமது விளையாட்டுத் துறையின் வெற்றியை மேலும் ஊக்கப்படுத்த, ‘ஒரு மாநிலம் – ஒரு விளையாட்டு’ என்ற முறையை பின்பற்ற வேண்டும். தங்களின் பிராந்தியத்தில் உள்ள திறமையாளர்களின் அளவு, இயற்கை ஆர்வம், பருவநிலை சூழல், இருக்கும் கட்டமைப்புகள் போன்றவற்றின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட அல்லது ஒரு சில விளையாட்டுகளுக்கு, ஒவ்வொரு மாநிலமும் முக்கியத்துவம் அளிக்கலாம். தொழில் நிறுவனங்களும், ‘ஒரு விளையாட்டு – ஒரு நிறுவனம்’ என்ற முறையை பின்பற்ற வேண்டியது அவசியம். புதிய பாரதம் துடிப்புடன் உள்ளது. விளையாட்டில் சிறப்பான முறையில் செயல்படுவதற்காக, அரசு மற்றும் பிரதமரின் முழு ஆதரவையும் நம் விளையாட்டுத் துறை பெற்றுள்ளது. விரைவில் பாரதத்தின் முதல் விளையாட்டுப் பல்கலைக் கழகம் மணிப்பூர் மாநிலத்தில் வரவுள்ளது. இது, விளையாட்டு வீரர்களுக்கு பலன் அளிக்கும். ஒலிம்பிக்கில் தலைசிறந்து விளங்குவதற்கான சூழலை நம் பல்கலைக் கழக அமைப்பு களாலும் ஏற்படுத்த முடியும்’ என மத்திய தகவல், ஒலிபரப்பு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்துள்ளார்.