ஹரியானா மாநிலம் பூஸ்கார்க் கிராமத்தில் உள்ள கர்னால் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் கோசாலையில் 45 பசுக்கள் கடந்த ஜனவரி மாத இறுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தது தொடர்பாக 4 பேரை கர்னால் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கர்னால் காவல்துறையின் குற்றப் புலனாய்வு அமைப்பு, மாடுகள் விஷ உணவு சாப்பிட்டதால் இறந்ததாகத் தெரிவித்துள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்ட ஷால் குமார், ரஜத் குமார், சூரஜ் குமார், சோனு ஆகியோர், பசுக்களுக்கு செல்போஸ் விஷம் கலந்த வெல்லத்தை ஊட்டியுள்ளனர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இறந்த பசுக்களின் சடலங்களை கோசாலையில் இருந்து தூக்கிச் செல்லும் ஒப்பந்தத் தொழிலாளர்களான இந்த குற்றவாளிகள், இந்த மாடுகளின் தோல் மற்றும் எலும்புகளை விற்று பணம் சம்பாதிப்பதற்காக அவற்றைக் கொல்ல திட்டம் தீட்டியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள், மாடுகளைக் கொல்வதை வழக்கமாகக் கொண்டவர்கள் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இருப்பினும் சந்தேகம் வராத வகையில் ஒரே நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மாடுகளை கொன்று வந்தனர். அன்று இரவு, அவர்கள் ஒன்றாக சேர்ந்து 45 பசுக்களைக் கொன்றதால் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. தலைமறைவாக உள்ள சுரேஷ் குமார் என்ற குற்றவாளியை தேடும் பணி நடந்து வருகிறது என ஆய்வாளர் மோகன் லால் கூறினார். கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹாவில் இதேபோன்ற ஒரு வழக்கில், விஷம் கலந்த தீவனத்தை சாப்பிட்டு டஜன் கணக்கான பசுக்கள் இறந்தன. அறிக்கைகளின்படி, ஆகஸ்ட் 3 அன்று தாஹிர் என்பவரிடம் இருந்து வாங்கிய தீவனத்தை அளித்ததால் தான் இந்த பசுக்கள் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.