குஜராத்தில் ஒரு லவ் ஜிஹாத்

குஜராத் மாநிலம் அகமதபாத் மாவட்டம் வஸ்த்ராபூரைச் சேர்ந்தவர் நசீர் உசேன். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இந்த சூழலில், அப்பகுதியிலுள்ள ஒரு அழகுக்கலை நிலையத்தில் பணிபுரிந்து வந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 18 வயது சிறுமியிடம் பழகிய நசீர் உசேன், தனது பெயர் சமீர் பிரஜாபதி என்றும், தான் ஒரு ஹிந்து என்றும் கூறி ஏமாற்றினார். தனக்கு திருமணமானதை மறைத்து, லவ்ஜிகாத் மூலம் அச்சிறுமியை காதல் வலையில் வீழ்த்தினார். அச்சிறுமியின் ஆதார் அட்டையை பயன்படுத்தி, ஆனந்தநகர் சாலையில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்தார். அங்கு இருவரும் லிவ் இன் உறவில் தங்கினர். சிறுமியுடன் உல்லாசமாக இருந்த பல்வேறு சந்தர்ப்பங்களில், அதை வீடியோ மற்றும் போட்டோ எடுத்தார். அதனைக் காட்டி மிரட்டிய நசீர், தனது நண்பர்கள் சிலருக்கு சிறுமியை விருந்தாக்கினார். இதை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் மிரட்டிவைத்தார். ஒரு நாள் சிறுமியிடம் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினார். பணம் தராவிட்டால் அந்தரங்க வீடியோக்களி சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார். இதனால் மனமுடைந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றார். இதன் பிறகு இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. நசீரின் இந்த செயலுக்கு அவரது மனைவி, மைத்துனி மற்றும் மைத்துனரும் உடந்தையாக இருந்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, நசீர், அவரது மனைவி, மைத்துனர் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான நசீரின் மைத்துனர் மற்றும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது நண்பர்கள் ஆகியோரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.