சம்ஸ்கார் பாரதி சார்பில் சென்னையில் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் “மூவர்ணம்” என்ற நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பிரபல திரைப்பட இயக்குனர் பத்மஸ்ரீ பிரியதர்ஷன் கலந்து கொண்டு கலைஞர்களை வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் அரங்கு நிறைந்த பார்வையாளர்கள், திரை உலக பிரமுகர்கள் அநேகம் பேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்ட அனைத்து சம்ஸ்கார் பாரதி பொறுப்பாளர்களையும் பிரபல திரைப்பட இயக்குனர் கலா மாஸ்டர் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சம்ஸ்கார் பாரதி மாநில தலைவர் நாராயணபட், “இது ஹிந்து சமுதாய மாற்றத்திற்கு சமஸ்கிரு பாரதி எடுத்து வைத்துள்ள முதல் அடியாகும் இனி இதனுடைய வேகம் அதிகரிக்கும்” என்று கூறினார். ராஷ்டிரிய முஸ்லிம் மஞ்ச் அகில பாரத துணைத் தலைவர் பாத்திமா அலி, மேடை ஏறி பாரதமாதா வேடம் தாங்கிய சகோதரியை கட்டி அணைத்து ஆசீர்வதித்தார்.