ஹலால் இறைச்சிக்கு தடை

அரசு அளிக்கும் FSSAI தரச் சான்றிதழ் தவிர வேறு எந்த அமைப்பும் உணவுப் பொருட்களுக்கு தரச் சான்றிதழ் அளிக்க உரிமையில்லை எனும் நிலையில்,தேசமெங்கும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என பல காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் கர்நாடகாவிலும் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கர்நாடக விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்பினர் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக யுகாதி பண்டிகையின்போது ‘ஹலால் இறைச்சியை புறக்கணிப்போம்’ என்ற பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஹலால் நடைமுறையில், இறைச்சிக்காக விலங்குகளின் கழுத்து சிறியதாக அறுக்கப்பட்டு, ரத்தம் மெதுவாக வெளியேறி அவை துடிதுடித்து சித்ரவதையை அனுபவித்து இறக்கின்றன.ஜட்கா முறையில் விலங்குகளின் கழுத்து ஒரே வெட்டில் வெட்டப்பட்டு அவை உடனடியாக இறக்கின்றன.இதில் அவற்றின் வலி குறைவு. இதைத்தவிர தற்போது இறைச்சி மட்டுமின்றி சைவ உணவுகள், சாக்லேட், ஸ்னாக்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் என அனைத்திலும் ஹலால் சான்றிதழ் என்ற நடைமுறை புகுத்தப்பட்டு கட்டாயப்படுத்தப்படுகிறது. இதனால் அவர்கள் பெருமளவு வருமானமும் ஈட்டுகின்றனர்.இத்தனைக்கும் இது அரசால் அங்கீகரிக்கப்படாத ஒரு அதிகாரப்பூர்வமற்ற சான்றிதழ் நடைமுறை.இதுதொடர்பாக பா.ஜ.க எம்.எல்சி ரவிக்குமார், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு அண்மையில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘‘இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் சான்றளிக்கும் உணவை தவிர வேறு எந்த அமைப்பும் சான்றளிக்கும் உணவையும் விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக ஒரு குறிப்பிட்ட மதத்தை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள‌ ஹலால் உணவுகளுக்கு தடைவிதிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ்பொம்மை தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.அதில், ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கும் மசோதாவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.அதன்படி, இந்த மசோதாவை பா.ஜக எம்.எல்.சிரவிக்குமார் தனிநபர் மசோதாவாக கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘‘சிலர் அதிகாரப்பூர்வமற்ற சான்றிதழை முன்வைத்து இறைச்சி சந்தையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.இதனால் பெரும்பான்மையான வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.அவர்களிடம் இருந்து சந்தையை முழுமையாக மீட்கும்வகையில் சட்டமசோதா கொண்டுவர முடிவெடுத்துள்ளோம்.அதனைநடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றவுள்ளோம்” என தெரிவித்தார்.வழக்கம் போல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதற்க்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.இதுகுறித்துபேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், “கர்நாடக பா.ஜ.கஅரசு ஹலால் மசோதா கொண்டுவந்தால் நாங்கள் அதனை எதிர்ப்போம்.மக்களை மதரீதியாக பிளவுப்படுத்தும் நோக்கில் இந்த மசோதாவை அரசுகொண்டுவருகிறது.அதனைபேரவையில் நிறைவேற்ற விட மாட்டோம்” என்றார்.