பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில், சிறுபான்மையினராக இருந்து, மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோருக்கு குடியுரிமை அளிக்க வழி செய்யும், குடியுரிமை சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. இது குறித்து ஐ.நா.விற்கான அகதிகள் மறுவாழ்வு அமைப்பு கருத்து கூற மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஐ.நா. பொதுச்செயலாளரின் துணை செய்தி தொடர்பாளர் கூறியது, இந்தியா கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் அவர்களது உள்நாட்டு விவகாரம் இதில் நாம் கருத்து சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.