டுவிட்டரில் சமீப காலமாக டிரெண்டிங் ஆகிய வரும் # GoBackModi ஹேஷ்டாக்கை பாக்.,ஐ சேர்ந்தவர்கள் உருவாக்கியது தெரிய வந்துள்ளது.
பிரதமர் மோடி தமிழகம் வரும் போது எல்லாம் டுவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு, அது இந்திய அளவில் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களை போல் தற்போதும் சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடி, தமிழகம் வந்துள்ளதால் #GoBackModi ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளதால் இம்முறை இந்திய இறையாண்மைக்கு எதிரான இத்தகைய செயல்பாடுகள் குறித்து உளவுத்துறை விசாரணை துவக்கியது.
இதில், பாக்.,ஐ சேர்ந்த சிலர் பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து இந்த ஹேஷ்டாக்கை உருவாக்கி, ஒவ்வொரு முறையும் டிரெண்டிங் ஆக்கி வருவது தெரிய வந்துள்ளது. மேலும், தமிழ் மற்றும் தமிழகம் மீது அதீத பாசம் கொண்டிருப்பது போன்ற கருத்துக்களையும் அவ்வப் போது பதிவிட்டு வருகின்றனர். #GoBackModi ஹேஷ்டாக்கை டிரெண்டிங் ஆக்கியது போன்று பாக்., மற்றும் சீனாவுக்கு ஆதரவான ஹேஷ்டாக்குகளையும் உருவாக்கி இவர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.
மோடி, தமிழகம் வரும் போது மட்டும் இத்தகைய ஹேஷ்டாக்குகள் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்படுவதால், இதன் பின்னணியில் திமுக இருக்கலாம் என முதலில் உளவுத்துறை சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தி எதிர்ப்பு, திராவிட கொள்கை காரணமாக கூட திமுக.,வினர் இத்தகைய ஹேஷ்டாக்கை உருவாக்கி இருக்கலாம் என சந்தேகித்ததாக கூறப்படுகிறது. ஆனால் உளவுத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியதில், இதன் பின்னணியில் பாக்., இருப்பது தெளிவாகி உள்ளது.