“ஆர்கனைசர்” என்னும் ஆங்கில வார இதழ், சுதந்திரப் போராட்டத்தின் போது பிறந்தது. பாரத வரலாற்றின் கொந்தளிப்பான காலகட்டங்களில், சமூகத்தின் கூட்டு உணர்விலிருந்து வலிமை பெற்ற இதழாக, ஆர்கனைசர் திகழ்ந்தது. இது எப்போதும் பாரதத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, கலாச்சாரம் மற்றும் தேசியப் பாதுகாப்பிற்காக குரல் கொடுக்கும்.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழ் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, உள்ளிட்ட 54க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கப் பெறுகிறது, இதன்மூலம் பாரதத்தின் கண்ணோட்டத்தை உலக அரங்கில் கொண்டு சேர்க்கிறது.
பாரத துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆற்றிய உரை, “தேசிய கடமையில் ஈடுபட்டுள்ள ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஸ்வயம்சேவகர் தேசியப் பிரச்சினைகளை குறித்து அறிவையும், உண்மைகளையும், 1950களில் ஜம்மு – காஷ்மீரில் நிலவிய பிரச்சினைகள் ஷியாம பிரசாத் முகர்ஜியின் அகால மரணம் மற்றும் லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் போன்றவை ஆர்கனைசர் படித்ததன் மூலம் அறிந்து கொண்டதாக கூறினார்.
தனது 80 ஆண்டுகால இதழியல் பயணத்தில், பாரதத்தின் பெரும் ஆவணத்தையும், அறநெறி மற்றும் நேர்மையுடன் செயல்படும் இதழாக, ஆர்கனைசர் ஆங்கில வார இதழ் விளங்குவதாக பாரத துணைக் குடியரசுத் தலைவர் பாராட்டினார்.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகிலபாரத பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொஸபாளே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், “தனது கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்து, ஆர்கனைசர் இதழ் தனது பரந்த சமூகத்தின் எண்ணங்களையும், ஆளுமைகளையும் வடிவமைத்ததை விளக்கினார். இந்த எட்டு தசாப்தங்களாக எண்ணங்கள், சிந்தனைகள், வாதங்கள் மற்றும் தேசியவாத கண்ணோட்டங்களை வடிவமைப்பதில் ஆர்கனைசர் ஒரு முக்கியப் பங்கு வகித்தது” என்று கூறினார்.
பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில், தனது ஆரம்ப நாட்களில், ‘தொலைவில் இருந்தும் பாசத்துடன் ஒரு ஆசிரியராக’ இருந்ததற்காக ஆர்கனைசருக்கு நன்றி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அதிகம் மேற்கோள் காட்டப்படும் இதழ் ஆர்கனைசர் தான் என்று கூறினார்.
ஆர்கனைசர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான கே. ஆர். மல்கானியின் வீரமிக்க மற்றும் துணிச்சலான பத்திரிகைப் பணியை அவர் நினைவு கூர்ந்தார். கே.ஆர் மல்கானி ஒரு சிந்தனைத் தலைவராகவும், பேச்சுரிமையின் போராளியாகவும் திகழ்ந்தார்.
இதழியல் என்பது செய்திகளை பரப்புவது மட்டுமல்ல, அறநெறி சார்ந்த பண்புகளையும், மக்களுக்கு கல்வி புகட்டுவதையும், சரியான எண்ணங்களை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் ஒரு சக்தியாகும். நமது ‘தேச ஆன்மாவின் குரலாக’ செயல்பட்டு வரும் ஆர்கனைசர் இதழுக்கு, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : குகத்யா