கிரேட் நிக்கோபார் திட்டம் வெண்ணெய் திரளுது, தாழி பத்திரம்!

பாரதம் தனது கடல்சார் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தாமல், புவியியலின் ஆதாயங்களைப் புறக்கணித்துள்ளது. காரணம் காங்கிரஸ் ஆட்சி. உதாரணம், மாபெரும் நிக்கோபார் திட்டம்; இது பல பத்தாண்டுகளுக்கு முன்பே செயல்பட்டிருக்க வேண்டும். விளைவு, நாம் அண்டை நாடுகளின் தயவில் கப்பல் போக்குவரத்தை கையாண்டோம்.

 

மலாக்கா நீரிணை என்பது, தற்போது உலக வர்த்தகத்தில் 40%க்கும் அதிகமான பண்டம் கடந்து செல்லும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த, ஒரு குறுகிய இடம். அந்த நீரிணையிலிருந்து வெறும் 40 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள கிரேட் நிக்கோபார், இந்த வழித்தடத்திலேயே மிக முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றில் அமைந்துள்ளது. உலக வர்த்தகம் நம் வீட்டு வாசலை கடந்து செல்வதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கத்துடன், மோடி அரசு மாபெரும் நிக்கோபார் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
8,000 மக்கள் தொகை கொண்ட (இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள) நிக்கோபார் தீவை பாரதத்தின் ‘’ஹாங்காங்” என்று அழைக்கப்படும் இடமாக மாற்ற ரூ 81,000 கோடியில் உருவாகிறது மாபெரும் நிக்கோபார் திட்டம். நிக்கோபார் தீவு உலக வர்த்தகத்தில் மிகப்பெரிய கடல் பாதையான மலாக்கா நீரிணைக்கு மிக அருகில் உள்ளது. இங்கு கப்பல் போக்குவரத்து மையம் மற்றும் சர்வதேச துறைமுகம் (Transshipment Hub & International Port) உருவாக்கப்படுவதால், பாரதத்துக்கு கடல் பாதுகாப்பும், இந்தோ-பசிபிக் பகுதியில் செல்வாக்கும் அதிகரிக்கும். பாரத கப்பற்படை, கோஸ்ட் கார்டு, விமானப்படை இவற்றுக்கு ஒரு வலுவான தளமாகவும் அமையும். சர்வதேச கொள்கலன் பரிமாற்ற முனையம் (International Container Transshipment Terminal (ICTT) அமைக்கப்படுவதால் சிங்கப்பூர், கொழும்பு போன்ற துறைமுகங்களுடன் போட்டியிடும், பாரதம் புதிய வணிக மையமாக மாறும். விமான நிலையம், நகர மேம்பாடு, சாலை இணைப்பு ஆகியவை நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும். கடல் வர்த்தகத்துடன் தொடர்புடைய லாஜிஸ்டிக்ஸ், மீன்பிடி, சுற்றுலா துறைகள் வளர்ச்சி பெறும். 24 மணி நேரமும், சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல் போக்குவரத்தை கண்காணிக்க முடியும், இதன் காரணமாக நாட்டின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும்.
முன்மொழியப்பட்ட கலாத்தியா வளைகுடா ஒருங்கிணைந்த வெப்ப மண்டல சுத்திகரிப்பு நிலையம் (ICTP), இந்தப் போக்குவரத்தை உள்நாட்டுமயமாக்கி, செலவுகளைக் குறைத்து, ஏற்றுமதிப் போட்டித்திறனை மேம்படுத்தி, ஆசியா- ஐரோப்பா, ஆசியா-ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா- − அமெரிக்க வர்த்தக வழித்தடங்களுக்கான ஒரு முக்கிய மையமாக பாரதத்தை நிலைநிறுத்தும். இதைவிட மிகப்பெரிய கிரேட் நிக்கோபார் திட்டம், ஒரு குடிமை-ராணுவ விமான நிலையம், 450 MVA திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகம் பயன்படுத்தும் மின் நிலையம், ஒருங்கிணைந்த குடியிருப்புப் பகுதி ஆகியவற்றை வரவழைக்கும். அப்போது இந்தச் சூழல் அமைப்பை முழுமையாக்கி, தன்னிறைவு பெற்ற ஒரு கடல்சார் மையம் உதயமாகும்.
இத்திட்டத்தின் மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய சோலார் மற்றும் பிற புதுமை ஆற்றல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. தீவில் நீர்ப்பாசனம், குடிநீர் வசதி, பசுமை வன பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் சீரான நடவடிக்கைகள் மேற்படி திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. கிரேட் நிக்கோபார் பகுதியானது, பசுமை வனம், கடல் உயிரியல், பவளப்பாறைகள் ஆகியவற்றால் உலகளவில் பிரபலமானது. இத்திட்டத்தில் மேற்படி இயற்கை வளங்களை பாதுகாக்கவும் உரிய திட்டம் தயார் நிலையில் உள்ளன.
கிரேட் நிக்கோபார் திட்டத்தின் மூலம் சுற்றுலா அடிப்படை வசதிகள் உருவாவதால் பொருளாதார ரீதியாக சுற்றுலா வளர்ச்சி பெருகும். தீவில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகளான சாலை, மருத்துவம், கல்வி வசதிகளை பெறுவார்கள். இந்த திட்டம் பாரதத்ததின் கிழக்கு சார் கொள்கை (Act East Policy) க்கு வலுசேர்க்கும். ASEAN நாடுகளான, சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம் போன்றவற்றுடன் பாரதத்தின் கடல் வாணிப இணைப்பை அதிகரிக்கும், பாரத நாட்டின் பொருளாதாரம் செழிக்கும். பாரதத்தை தன்னம்பிக்கை / தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவதில் இந்த திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும். வளர்ச்சி வேகமெடுக்கும்.

 

கடல் நடுவே மதமாற்ற வலைவீச்சு

 

கற்பக விருட்சமாக, காமதேனுவாக உருவாகி வரும் நிக்கோபார் திட்டத்தை தடுத்துவிட கிறிஸ்தவர்களான ராகுல்காந்தியும், சோனியா காந்தியும் முயற்சி செய்கின்றனர்.
இதில் சர்வதேச சதியும் அடங்கியுள்ளது என்பதுதான் சூட்சுமம். பாரதம் வல்லரசாக மாறக் கூடாது என்பதில், மேற்கத்திய நாடுகள் முனைப்பாக இருக்கின்றன. கிரேட் நிக்கோபார் திட்டத்திற்கு எதிராக, 2025 மத்தியில், பாரத குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு, 13 நாடுகளைச் சேர்ந்த 39 ‘அறிஞர்கள்’ கடிதம் எழுதியுள்ளார்கள். மேற்படி கடிதத்தில், வெறும் 300 பேர்கள் மட்டுமே அடங்கிய ஷோம்பன் பழங்குடியினர் வாழ்வதாக கூறி, “இந்தத் திட்டம் வரையறுக்கப்பட்ட வடிவத்தில் நடந்தால்,, அது பழங்குடியினரான ஷோம்பனுக்கு மரண தண்டனையாக இருக்கும்’ என்று நாங்கள் நம்புகிறோம், இது சர்வதேச இனப்படுகொலை குற்றத்திற்கு சமம்” என அரசை எச்சரிக்கும் விதமாக, குற்றச்சாட்டுகளை சுமத்தி, நிக்கோபார் தீவுகளில் வசிக்கும் 72 சதவீதம் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக, மறைமுகமாக இத்திட்டத்திற்கு குழி பறிக்கிறார்கள். சீன ஊடகங்களும், அரசு சார்ந்த அமைப்புகளும் இந்தத் திட்டத்தால் நிக்கோபாரின் சுற்றுச்சூழல் அழிவதாகவும், பூர்வீக பழங்குடியினரின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் சர்வதேச அளவில் ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகின்றன.
சீனாவின் எரிசக்தி உள்ளிட்ட வர்த்தகத்தில், சுமார் 80 சதவீதம், மலாக்கா நீரிணை வழியாகவே பயணிக்கிறது. எனவே சீனா இந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பைக் காட்டுகிறது. கிரேட்டர் நிக்கோபார் தீவு இந்த நீரிணையின் நுழைவாயிலுக்கு மிக அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாரதம் இங்கே ஒரு சர்வதேச கொள்கலன் முனையத்தையும் (Transshipment Terminal) ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையத்தையும் அமைப்பது சீனாவை முடக்கும்.
சர்வதேச அளவில் செயல்படும் சில சுற்றுச்சூழல் / பழங்குடியின உரிமை அமைப்புகள் இந்தத் திட்டத்திற்கு எதிராக ஐ.நா. சபை வரை குரல் கொடுத்துள்ளன. பாரத அரசு சில சமயங்களில் இத்தகைய எதிர்ப்புகளை “பாரதத்ததின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் அந்நிய சக்திகளின் சதி” என்று விமர்சித்துள்ளது. குறிப்பாக, சிங்கப்பூர் மற்றும் கொழும்பு போன்ற வெளிநாட்டுத் துறைமுகங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க முடிவதால் கிடைக்கும் லாபம், இந்தத் திட்டம் வந்தால் பாரதத்துக்கு கிடைக்கும் என்பதால் அந்த நாடுகளின் வர்த்தக நலன்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம்.
இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள், சீனாவின் ஆதிக்கத்தை எதிர்க்கவில்லை. மேற்படி பகுதியில் பாரதத்தின் சரக்குகளில் 25% வெளிநாட்டு துறைமுகங்கள் வழியாக அனுப்பப்படுகிறது. குறிப்பாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கையின் கொழும்பு துறைமுகம் வழியாக பாரதத்தின் வர்த்தகத்தில் 40% கையாளுகிறது. நிக்கோபார் திட்டம் நிறைவு பெறும் போது, இதன் மூலம் கிடைக்கும் வருவாய் பாரதத்திற்கு கிடைக்கும்.
சிங்கப்பூருக்கு போட்டியாக இருக்கக்கூடிய ஒரு கப்பல் போக்குவரத்து மையத்தை உருவாக்கவும், அதே சமயத்தில் பெய்ஜிங் தொடர்பான வசதிகளை நாம் நம்பியிருப்பதை முடிவுக்குக் கொண்டுவரவும், இந்தத் திட்டம் பாரதத்துக்கு கிடைக்கும் மிகப்பெரிய வாய்ப்பு; இதைப் புரிந்து கொள்ளாமல், உள்ளூரில் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மிகவும் கவனமாக இத்திட்டத்தை செயல்படுத்த பாரத அரசு முனைந்துள்ளது என்பதற்கு ஒரு நிகழ்வை சுட்டிக்காட்டலாம்.
பழங்குடி மக்களின் நலனில் அக்கறை காட்டுவதாக நடிக்கும் சோனியா காந்தி, ஜார்க்கண்ட் மாநிலத்தில், வங்கதேச முஸ்லிம்கள் பழங்குடி (எனப்படும் வனவாசி) பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களது நிலத்தை அபகரிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு மீதான வழக்கு நடந்தது. உயர்நீதிமன்றம், ஊடுருவலை தடுத்து பழங்குடி மக்களின் நிலத்தை காப்பாற்ற வேண்டும் என கூறிய போது, சோனியா காந்தி வாய் திறக்கவில்லை. நேரடியாக இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க இயலாத சீனாவும், பாகிஸ்தானும் சோனியா மூலம் தங்களின் எதிர்ப்பை காட்டுகிறார்கள். கிறிஸ்தவ மிஷனரிகள் ஒட்டு மொத்தமாக கிரேட்டர் நிக்கோபார் திட்டத்திற்கு எதிர்ப்பு காட்டுகிறார்கள். மதமாற்றத்திற்கு இடையூறு ஏற்படும் என்றும், கிறிஸ்தவ தேசத்தை உருவாக்க முடியாது என்றும் பேசி, மற்ற நாடுகளில் உள்ள மிஷனரிகளையும் எதிர்ப்பு தெரிவிக்கச் சொல்லி கும்பல் சேர்க்கிறார்கள்.
நிக்கோபார் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ‘கிறிஸ்தவ ஐக்கியம்’, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள ஆயிரக்கணக்கான தீவுவாசிகளிடம் கிறிஸ்தவத்தை கொண்டு செல்வதற்காக உருவான அமைப்பு. ‘புறக்கணிக்கப்பட்ட மக்களைக் காப்பற்றி, சிதறிக்கிடக்கும் தீவுகளில் உள்ள 546 கிராமங்களிலும் கிறிஸ்தவ சபையை நிறுவ’ கர்த்தரால் அனுப்பட்ட ஊழியர் என வர்ணிக்கப்படும் வர்கீஸ் மேத்யூவால் இது உருவாக்கப்பட்டது. சென்னையைத் தளமாகக் கொண்ட `அந்தமான் விஷன்’ என்ற நற்செய்திக் குழு மற்றொன்று. உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடைகளையும், தன்னார்வலர்களையும் திரட்டும் குழு அது. இந்த குழுவின் முதன்மையான நோக்கம், அந்தாமான் நிக்கோபார் தீவுகளில் மத மாற்றம் செய்வது. இதற்கு இடையூறாக அமையவிருப்பது கிரேட்டர் நிக்கோபார் திட்டம்.
போர்ட் பிளேயரில் உள்ள இந்திய கிறிஸ்தவ ஐக்கியம் (ICF) என்ற அமைப்பினர், இரண்டு அனாதை இல்லங்களை நிறுவினர்; தற்போது அவற்றில் மொத்தம் 160 குழந்தைகள் உள்ளனர். தவிரவும், தொலைதூர மாவட்டங்களில் 37 முன்னோடி மிஷன் சர்ச்கள் கட்டி, உள்ளூர் போதகர்களுக்குப் பயிற்சி அளித்து, புதிய சர்ச்கள் நிறுவுவதற்காக முன்னோடி மிஷனரிகளாக அனுப்பும் ஒரு பயிற்சி மையத்தையும், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிறுவினர். இது மத மாற்ற பாசறை அல்லாமல் வேறென்ன?
கிறிஸ்தவ மிஷனரிகளைப் போலவே, Conservation Action Trust, Survival International, Bombay Asian Network on Social and Agrucultural Development, Earth.org, Global Asia போன்ற
என்.ஜி.ஓ.களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த அமைப்புகள் சீனாவின் முயற்சியை தடுக்க முயலவில்லை. அதாவது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சீனா, பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தை எதிர்க்கவில்லை. இவை கிறிஸ்தவ ஆதரவு கொண்ட நிறுவனங்களின் நிதியைப் பெற்று எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்.
2014-ல், பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, கிறிஸ்தவ மதபோதகர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் உண்மையில் ஓங்கே மற்றும் ஐராவா போன்ற பழங்குடியின மக்களைச் சென்றடைய அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு நிரந்தர அறிவுறுத்தல்கள் இருந்தன. பல மேற்கத்திய நாடுகள் குறிப்பாக தென்கொரிய மதபோதகர்கள் நிக்கோபார் தீவுகளுக்கு பலமுறை வந்து, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளார்கள். 2005-ல் மத்திய அரசின் (காங்கிரஸ் ஆட்சியில்) உத்தரவுப்படி, அவர்களை தொந்தரவு செய்யவோ அல்லது அவர்களிடம் கேள்வி கேட்கவோ கூடாது என்பதால், நாங்கள் கண்டு கொள்ளவில்லை என்றார்கள் அதிகாரிகள். இதன் காரணமாக 2004 முதல் 2014 வரை அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியப் பெருங்கடல் எனப்படுகிற ஹிந்து மகா சமுத்திரத்தின் பாதுகாவலர்களாக புவியியல் நம்மை நியமித்துள்ளது; அந்தப் பொறுப்பை நாம் உத்திபூர்வமாகவும், அதிகாரப்பூர்வமாகவும் ஏற்க வேண்டிய தருணம் இதுவே. அந்தப் பெருங்கடல் நமக்குச் சொந்தமானது; நாம் அதை உரிமை கோர முன்வராவிட்டால், வேறு யாராவது உரிமை கோருவார்கள். தேவைதானா?

கட்டுரையாளர்: எழுத்தாளர்