பிரிவினையே உன் பெயர் திமுகவா?

தொகுதி மறுசீரமைப்பு மசோதா சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, பாஜகவின் உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, பிரிவினைவாத மொழியில் பேசும் திமுகவின் அரசியலை எதிர்க்கிறோம் என கூறியிருந்தார். இதற்கு, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், திமுக தலைவர்கள் பிரிவினை குறித்து முன்பு பேசியவை உங்கள் பார்வைக்கு.
2018 மார்ச் மாதம் ஈரோட்டில், ஸ்டாலின் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசும் போது. தென் மாநிலங்கள் தனிநாடு கோரிக்கை வைக்குமானால் அதை வரவேற்பதாக தெரிவித்தார். இது, ஸ்டாலின் மனநிலை பிரிவினைவாதத்தில் உள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது.
1940 ஜீன் மாதம் 2ந் தேதி ‘திராவிடநாடு பிரிவினை மாநாடு’ என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ”இந்தியா, இந்திய தேசம், இந்தியர் என்னும் பிணைப்புகளில் இருந்து திராவிடநாடு (சென்னை மாகாணம்) தனியாகப் பிரிக்கப்பட்டு, அதற்கென தனி அரசாங்கத்தை அமைத்து, தனி ஸ்டேட் ஆக ஆக்கி கொடுக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசை கேட்டுக் கொள்ளும் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
பலமான மத்திய அரசு வேண்டும் என்று கூறுகிறார்கள். மத்திய அரசுக்குப் பலம் எதற்காக? அந்தப் பலம் யாருக்கு எதிராக? என்பதையும் சிந்தித்துப் பார்த்திட வேண்டும் என பிரிவினைக்கு பிள்ளையார் சூழி போட்டவர் அண்ணாதுரை ”ஆகவே, இந்தப் பெருங்கேட்டிலிருந்து தமிழ்நாடும், தமிழனும் தப்பிப் பிழைத்து விடுதலை பெறவேண்டுமானால், இந்தியக் கூட்டாட்சி என்கின்ற பார்ப்பன ஏகபோக சர்வாதிகார ஆட்சியிலிருந்து விலகி, தமிழ்நாட்டை சுதந்திர தமிழ்நாடு ஆக ஆக்கிகொண்டாலன்றி, வேறு எக்காரணத்தாலும் எக்கிளர்ச்சியாலும் முடியவே முடியாது என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன் (விடுதலை – தலையங்கம் 13.5.1960 )
உண்மையில் நாட்டின் பெயர் மாற்றத்தில் யாருக்காவது நியாயமான கவலை இருக்குமானால், ஜீன்-5ந் தேதி இந்திய யூனியன் படத்தை ஒரு கையிலும், தீப்பந்தத்தை மறுகையிலும் தூக்கி ஊர்வலம் வந்து டெல்லி ஆதிக்க ஆட்சிக்குத் தீ மூட்டுங்கள் ( விடுதலை – அறிக்கை – 18.5.1960 ) தமிழ்நாடு எதற்காக யூனியன் (டெல்லி) ஆட்சியின் கீழ் அடிமையாக இருக்க வேண்டும்? சிந்தியுங்கள் என் இந்தியத் தோழர்களே நன்றாகச் சிந்தியுங்கள். தெளிவடைவீர்களானால், ஜீன் 5ந் தேதி மாலை இந்தியத் தேசப்படத்தில் தீ வையுங்கள் (விடுதலை – 22.5.1960) ஆகவே தமிழ்நாடு தனியாக பிரிய வேண்டும், பிரிக்கப்பட வேண்டும் என்பதில் திமுக தலைவர்களுக்கு உள்ள வேகத்திற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும்.