நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த வாரம் மக்களை பாதிக்கக் கூடிய பிரச்சினைகள், மக்களுக்கு தேவைப்படும் வசதிகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு காண முயற்சிக்கும் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத் பற்றி அறிவோம்…
அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து என்பது, அதிகமாக மக்களை பாதிக்கக் கூடிய பிரச்சினைகள், மக்களுக்கு தேவைப்படும் வசதிகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு காண முயற்சிப்பதே அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்தின் நோக்கம். வன்முறையற்ற தொடர் பேச்சுவார்த்தையின் மூலம் இலக்கை அடையக் கூடிய இயக்கம். இதன் சுருக்கமான பெயர் ஏ.பி.ஜி.பி (ABGP)
தோற்றம்
இந்த இயக்கம், 1974 செப்டம்பரில் S/9194 என்ற பதிவு எண்ணுடன், டெல்லியில் பதிவு செய்யப்பட்டது. அமைப்பை தொடங்கியவர், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றிய பிந்து மாதவ ஜோஷி.
குறிக்கோள்
ஏ.பி.ஜி.பி.யின் முக்கிய குறிக்கோள், மக்களை சுரண்டலில் இருந்து (EXPLOITATION), வஞ்சிப்பதில் இருந்து பாதுகாப்பதே. பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை, தனது அடிப்படை லட்சியமாகக் கொண்டுள்ளது.
அமைப்பின் பெயர் விளக்கம
அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து என்பதின் பொருள்,
அகில பாரதிய – − பாரதம் முழுவதும்,
க்ராஹக் – − பேச்சு தமிழில் சந்தைக்கு வரும் வாடிக்கையாளரை “கிராக்கி” என்று அழைக்கப்படும் வழக்கம் உள்ளது. நாளடைவில் கிராக்கி என்பது க்ராஹக் என்று மருவி வந்தது,
பஞ்சாயத்து −- அமைப்பு
அமைப்பின் வலிமை
தற்போது பாரத நாட்டில் 850 கிளைகளை ஏற்படுத்தி, 212 மாவட்டங்களில் நுகர்வோர் சேவை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் 1,600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தில் 2010 நவம்பர் 10 அன்று, புத்துணர்வோடு
ஏ.பி.ஜி.பி உருவாக்கப்பட்டது. மாவட்ட அளவில் மாதந்தோறும், மாநில அளவில் முக்கிய தருணங்களிலும், நாடு தழுவிய அளவில் வருடந்தோறும் கூடி, நுகர்வோர் நலன் குறித்து கலந்தாலோசிக்கும் மக்கள் இயக்கம், அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து. விழா காலங்களில் மற்றும் கல்வி கூடங்களில் நுகர்வோர் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தி, நுகர்வோர் பணியில் பெண்களை முன்னிறுத்தி பணியாற்றுகிறது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் (Consumer Protection Act) 1986 நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு பாடுபட்ட இயக்கம். நவீன தேவைகளை கருத்தில் கொண்டு, 2019ல் மேம்படுத்தப்பட்ட “நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்” அமலுக்கு வர துணை புரிந்தது.
அமைப்புக்கு வழிகாட்டுபவர்கள்
அகில பாரத இணைச் செயலாளர் விவேகானந்தன் ஜி, தென் பாரத அமைப்புச் செயலாளர் எம்.என் சுந்தர் ஜி, இணை அமைப்புச் செயலாளர் சத்திய பாலன் ஜி ஆகியோர் தகுந்த நேரத்தில் ஆலோசனைகள் சொல்லி, அமைப்பை வழி நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
செய்த சாதனைகள்
நேரத்தின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில், பல கல்லூரிகளில் கணிணி விளையாட்டுகளின் (Digital Games) பற்றி நன்மை / தீமை பற்றி கலந்துரையாடல் செய்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக, நேரடி ரயில் வசதி சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு இல்லாமல் இருந்தது. திருவிழா காலங்களில் சென்று வர மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். பெரும்பாலான மக்கள் ரூ. 200 கட்டணத்தில் பேருந்தில் சென்றனர். இதை கருத்தில் கொண்டு, சுமார் 50,000 கையெழுத்து பொதுமக்களிடம் இருந்து வாங்கி, அதை ரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரியிடம் சமர்ப்பித்து, முதன் முதலாக 2024 ஏப்ரல் 13 அன்று புருலியா சந்திப்பில் இருந்து, திருநெல்வேலி (வண்டி எண். 22605) ரயில் வண்டி, பெரம்பூர் மார்க்கமாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நின்று சென்றது. வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சிறப்பு ரயில் இயங்கும். (திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை)
தொடர் முயற்சியாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து (EMU), திருவண்ணாமலை வரை தினமும் மே 2 அன்று, ரயில் சேவை தொடங்கியது. ஏ.பி.ஜி.பி.யின் கோரிக்கை ஏற்கப்பட்டு, ரூ. 50 என குறைந்த கட்டணத்தில், மக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து வருகின்றனர். பஸ் கட்டணம் ரூ. 200 கொடுத்து திருவண்ணாமலை பயணம் செய்த பொதுமக்கள், ரூ.100 வரை விரைவு ரயிலிலும், ரூ.50 என லோக்கல் ரயிலிலும் கட்டணம் கொடுத்து பயணம் செய்கின்றனர்.
அனைவரும் ரேஷன் பொருள் வாங்க வசதியாக, மாதத்தின் முதல் இரு ஞாயிறு அன்று தமிழகம் முழுவதும் 34,500 ரேஷன் கடைகளை திறக்க ஏ.பி.ஜி.பி பாடுபட்டது. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மிகவும் பயன் அடைந்தனர்.
ஏ.பி.ஜி.பி முயற்சியால் தமிழகத்திலிருந்து வாரந்தோறும் 12 கும்பமேளா சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெருமளவில், கடந்த வருடம் நடைபெற்ற கும்பமேளாவில் கலந்து கொண்டார்கள்.
முக்கியப் பண்டிகைகள் மற்றும் விசேஷ நாட்களில், முன் கவனம் செலுத்தி கடந்த ஒரு வருடமாக 18 சிறப்பு ரயில்கள் இயக்கிட ஏ.பி.ஜி.பி உறுதுணையாக இருந்துள்ளது.
மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள, இணையதளம் மூலம் தகவல் அறியும் உரிமையைப் போல, தமிழக அரசிடம் கோரி இருந்தது ஏ.பி.ஜி.பி. தமிழ்நாட்டிலும் இதை அமலாக்க, மாநில அரசும் அரசாணை எண் 49,
29-.04.-2020 தேதியன்று வெளியிட்டுள்ளது
ஏ.பி.ஜி.பி.யின் மிகப்பெரிய சாதனையாகும்.
கொரோனா பரவலால் 2020ல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் ரத்தான போது, பயண கட்டணத்தை விமான நிலையங்கள் திருப்பி தர மறுத்தன. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அனைவருக்கும் கோடிக்கணக்கான பயணச்சீட்டு பணம் திரும்ப கிடைக்க வைத்தது.
சென்னை மாநகராட்சி தெருப்பெயர் பலகைகளில் மண்டலம், பகுதி மற்றும் வார்டு எண்களும் இடம் பெற வைத்தது.
வேண்டுகோள்
நம்மை சுற்றி உள்ள எத்தனையோ நுகர்வோர் பிரச்சினைககளை கண்டும், காணாதிருந்து, சகிக்கப் பிறந்தோர் நாமல்ல; அதை தீர்த்து, சாதிக்க பிறந்தோரே நாம். சாதாரண மக்களின் சகிப்புத் தன்மை, வருங்கால சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்து, கற்ற படிப்பினை உங்கள் வாழ்வுக்கு ஒளியேற்ற, உங்கள் வருங்காலம் சமூகத்தின் ஒளிர்காலம் ஆக, நீங்கள் ஏ.பி.ஜி.பி.யில் உறுப்பினர் ஆகலாம்.
நம் பகுதி / ஊரில் மக்கள் பாதிக்கும் பிரச்சினைகளை கலந்தாலோசித்து, மக்கள் ஒத்துழைப்புடன் கூடிய நடவடிக்கைகளை ஏ.பி.ஜி.பி மூலம் மேற்கொள்ளலாம். விழாக் காலங்களில் மற்றும் கல்விக் கூடங்களில் நுகர்வோர் விழிப்புணர்வு கண்காட்சி நடத்த அழைக்கலாம். வருங்கால தலைமுறைக்கான மாணவ -மாணவிகளிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய பல்வேறு போட்டிகளை நடத்தலாம்.
நாட்டு நலனை கருதி, செயல்பட நினைக்கும் நுகர்வோரா நீங்கள்? உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது ஏ.பி.ஜி.பி அமைப்பு. இன்றே இணையுங்கள். ஆண்டு உறுப்பினர் கட்டணம் ரூ. 150/- செலுத்தி, மாதாந்திர நுகர்வோர் கூட்டத்தில் பங்கேற்பீர்! நுகர்வோர் விழிப்புணர்வு தகவல்களையும் இலவசமாக பெற்றிடுவீர்!
ஏ.பி.ஜி.பி. உறுப்பினர் ஆக: www.abgptn.org
தொடர்புக்கு: 90435 17840 –
எம்.என். சுந்தர், தென் பாரத அமைப்புச் செயலாளர், அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து
கட்டுரையாளர் : வடதமிழக தலைவர், அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து