மண்ணைக் கவ்விய மார்க்சிஸ்டுகள்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெறும் கேரளத்தில், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியவுடன், சென்ற வாரம் உலகப் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் திருவிழா வந்தது. திருவிழாவில் ஏதாவது குழப்பம் ஏற்படுத்தி மாநகராட்சியின் பெயரைக் கெடுக்க, கம்யூனிஸ்ட் தர்பார் தலைகீழாக நின்று பார்த்தது; பாச்சா பலிக்கவில்லை. திருவிழாவுக்கு மிகவும் அவசியமான குடிதண்ணீர் வரும் குழாய்களை சேதப்படுத்தி, தோழர்கள் கொக்கரித்தார்கள். பாஜகவின் மாநகராட்சி நிர்வாகம், புயல் வேகத்தில் செயல்பட்டு, 60 நகர்ப்புற வார்டுகளுக்கும், 60 டேங்கர் லாரிகளில் நீர் நிரப்பி கொண்டு வந்து நிறுத்தி விட்டது. அது தவிர அம்மன் கோயில் அருகே 10 லாரி தண்ணீர் தயாராக இருந்தது. இவ்வாறு ஒரு சதி முடக்கப்பட்டது. அடுத்து தோழர்கள் அரசு டாக்டர்களை வீதியில் நிறுத்தி டாக்டர்கள் போராட்டத்தில் இருக்கிறார்கள், மருத்துவ உதவி கிடைக்காது என்று பக்தர்களை மிரட்டினார்கள். அமிர்தானந்தமயி மருத்துவமனையும், சேவா பாரதியும் எத்தனை ஆயிரம் டாக்டர்கள் வேண்டும் என்று மாநகராட்சியிடம் கேட்டு முழு அளவில் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தது. இவ்வாறு அடுத்த சதியும் தகர்ந்தது. இதற்கடுத்தபடியாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் இருப்பதாக ஜோடனை செய்து, திருவிழாவை அடுத்து நகரமே குப்பைமேடு ஆகிவிடும் என்றெல்லாம் பீதி கிளப்பினார்கள் தோழர்கள். சேவா பாரதி அமைப்பினர் ஐயாயிரம் தன்னார்வலர்களை தூய்மைப் பணிக்காக அணிவகுக்கச் செய்து விட்டார்கள். மொத்தத்தில் மாநிலம் கைவசம் இருந்தாலும், கம்யூனிஸ்டுகளால் தீய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. மாநகராட்சி மட்டுமே கைவசம் இருந்தபோதிலும் பாஜகவினர் சேவா பாரதி / ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டலுடன் பல்லாயிரக்கணக்கான ஹிந்து தாய்மார்கள் அமைதியாக பொங்கல் வைத்து அம்மனை வழிபட வெற்றிகரமாக ஏற்பாடு செய்து விட்டனர். −ஊடகங்கள்