தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50.1 சதவீதம் அதிகரிப்பு

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன. இது 68.36 சதவீதம் உயர்ந்துள்ளது. 2019ல் 2,396 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது 2023ல் 4,581ஆக உயர்ந்து விட்டது. குற்ற அதிகரிப்புக்கு மது வெள்ளமாகப் பாய்வதும், மாநில ஆளும் கட்சியான திமுகவினர் இவ்விவகாரத்தில் மிகமிக மோசமாக செயல்படுவதும் முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க முனைப்பார்ந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கண்துடைப்பு நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பெண்கள் பொது இடங்களுக்கு பாதுகாப்பாக செல்ல முடியவில்லை. எப்போது என்ன நடக்குமோ என்று பெண்கள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளைக் கூட காமக்கொடூரன்கள் விட்டு வைக்கவில்லை. ஒருசில தகாத சம்பவங்களைப் பார்ப்போம்….

நவம்பர் 7ம் தேதி மதுரை வசந்த நகர் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த ஜெயராம், மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியை பொற்செல்வி, ஆசிரியை கிருஷ்ணவேணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட நபர்களின் மீது போக்சோ சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

நாகமங்கலம் என்ற ஊரில் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்கான விடியல் உறைவிடம் உள்ளது. இங்கு பெண்களின் குளியல் அறையில் ஸ்பை கேமரா பொருத்தப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. ஒடிசாவைச் சேர்ந்த நிலுகுமாரி குப்தா மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது நண்பர் ரவிபிரதாப் சிங் ஆகியோரை நவம்பர் 5ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

பெண்கள் குளிக்கும்போது எடுத்த படங்களை கணிசமான தொகைக்கு விற்றுள்ள விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் என்ன நடந்தது என்பது தேசிய அளவில் பேசு பொருளாகி விட்டது. நவம்பர் மாதம் 2ம் தேதி கல்லூரி முதுநிலை மாணவி (வயது 20) தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தார்.

3 நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து, கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கற்பழித்தனர். இதை மூடி மறைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எதிர்ப்பு வலுத்ததையடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டனர். நவம்பர் 3ம் தேதி சம்பந்தப்பட்ட நபர்களை முட்டிக்கு கீழே சுட்டு போலீசார் பிடித்தனர்.

தூத்துக்குடியில் 40 வயது பெண்ணை, 43 வயதான முருகன் என்பவர் நவம்பர் 4ம் தேதி கற்பழிக்க முயன்றிருக்கிறார். பெண்ணின் வாயை இறுகப் பொத்தி, தகாத செயலில் ஈடுபட முற்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண், உச்ச தொனியில் கதறினார். அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து, முருகனை சரமாரியாக உதைத்தனர். போலீசாரிடம் முருகனை ஒப்படைத்தனர்.

திருவாரூர் இன்றைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகவும் நெருக்கமானது. இந்த ஊரைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியாகாத மாணவியை 17 வயதான கல்லூரி மாணவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அக்டோபர் 8ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. இப்போது சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே திருவாரூரில், மற்றொரு தகாத செயல் அக்டோபர் மாத இறுதியில் நடைபெற்றுள்ளது. 47 வயதான முஸ்லிம் பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார். அக்டோபர் 28ம் தேதி அவரை ஒரு நபர் வீட்டுக்குள் புகுந்து பலாத்காரம் செய்தார். சம்பந்தப்பட்ட பெண்ணின் மகள் வீட்டுக்கு திரும்பியவுடன் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் தீன் ஹனீஸ் என்பதும், அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் தான் என்பதும் புலனாய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சென்னை நந்தம்பாக்கத்தில் 25 வயதான பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். 28 வயதான பெண் அவரது வீட்டில் உள்ள குளியறையில் நீராடுவதை மொபைலில் பிரகாஷ் படம் பிடித்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண் அலறியதையடுத்து அவரது உறவினர்கள் பிரகாஷை சரமாரியாக உதைத்தனர். போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.

சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம்…. கடந்த ஆட்சியைக் காட்டிலும் இப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50.71 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021க்கும் 23க்கும் இடைப்பட்ட காலத்தில் 1,208 பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக குற்றப்பதிவேட்டில் தரவு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதைப்போல குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன. இது 68.36 சதவீதம் உயர்ந்துள்ளது. 2019ல் 2,396 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது 2023ல் 4,581ஆக உயர்ந்து விட்டது. குற்ற அதிகரிப்புக்கு மது வெள்ளமாகப் பாய்வதும், மாநில ஆளும் கட்சியான திமுகவினர் இவ்விவகாரத்தில் மிகமிக மோசமாக செயல்படுவதும் முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

ஆனால் இதை திமுகவினர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாத வகையில் காவல்துறை செயல்படும் காலம் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நனவாகும் வேளையில், திமுகவினரின் பாலியல் முறைகேடுகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி