காஷ்மீர் பிரச்சனையில் அ தி மு க பாராளுமன்றத்தில் ஆதரித்ததை எதிர்த்து கருத்து சொன்ன ஸ்டாலின் பேசாமல் கட்சியை அகிலஇந்திய பாரதிய ஜனதா கட்சி என்று மாற்றிவிடலாம் என்று சொல்லியுள்ளார் . ஸ்டாலின் அவர்களே அ தி மு க உங்களைப்போல சேக்கப்துல்லா குடும்பத்துக்கும் முஸ்லீம் சமூகத்துக்கும் அடிமைகள் இல்லை . ஏனென்றால் இந்த கட்சி எம் ஜி ஆர் ரால்ஆரம்பிக்கப்பட்டபோதே அது அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்றே ஆரம்பிக்கப்பட்டது. அதுவும் இல்லாமல் தற்போது இவர்கள் எடுத்த இந்த முடிவுக்கு முந்தய முதல்வர் ஜெயலலிதா முன்பு நாடாளுமன்ற மாநிலங்கவையில் பேசிய பேச்சு காரணமாக இருக்கிறது . நீங்கள் ஆதரிக்கும் எல்லா விஷயத்தையும் எல்லோரும் எதிர்க்க வேண்டும் என்பது பேராசை.
கடந்த 35 வருடங்களுக்கு முன்பாக மாநிலங்களவையில் ஜெயலலிதா எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசு தற்போது விடையளித்திருக்கிறது
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா, 1984ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரானார். மாநிலங்களவையில் அவருக்கு அண்ணா அமர்ந்த 185-வது இருக்கை ஒதுக்கப்பட்டது. மாநிலங்களவையில் அவர் ஆங்கிலத்தில் உரையாற்றினாலும், ஜம்மு-காஷ்மீர் பிரச்சனை குறித்து மாநிலங்களவையில் 1984-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி பேசினார். கடந்த 35 வருடங்களுக்கு முன் அவர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசு தற்போது விடையளித்திருக்கிறது.
1984-ம் வருடம் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஃபரூக் அப்துல்லா ஆட்சியை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கலைத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா பேசுகையில், ’356-வது சட்டப் பிரிவைப் பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீர்மாநில அரசைக் கலைத்திருக்கிறீர்கள். இதே பிரிவின் கீழ் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியும் கலைக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.
இந்தச் சட்டப்பிரிவைப் பயன்படுத்துவது என்பது இது முதல் முறையல்ல. அல்லது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவே கடைசி முறையாகவும் இருக்கப்போவதுமில்லை. நாடு விடுதலை அடைந்த பிறகு, இந்தச் சட்டம் பலமுறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பில் இந்தச் சட்டம் இருக்கும் வரையும் இதைப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது’’
“எனக்கு இரு கேள்விகள் இருக்கின்றன. முதலாவதாக, ஜம்மு – காஷ்மீர் அரசைக் கலைத்துவிட்டு அங்கு ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வருவதுதான் மத்திய அரசின் திட்டமா? இரண்டாவதாக, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு, இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏன்? அதை இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்ட வரையறைக்குள் ஏன் கொண்டுவரக் கூடாது?’’ என 35 வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா மாநிலங்களவையில் எழுப்பிய கோரிக்கையை மத்திய அரசு தற்போது நிறைவேற்றியிருக்கிறது. அவரால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க-வைச் சேர்ந்த உறுப்பினர்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்திருப்பது வியப்பில்லை.
ஒருவேளை அவர் உயிரோடு இருந்திருந்தால் ஜம்மு – காஷ்மீர் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி மேற்கொண்ட முடிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பார் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.