ஜெர்மனியில், ஜூனியர் உலகோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ‘ஏர் பிஸ்டல்’ தனிநபர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சரப்ஜோத் சிங், 575.13 புள்ளிகளுடன் 5வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார்.
அடுத்த நடந்த பைனலில் அசத்திய சரப்ஜோத் சிங், 239.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஈஷா வெள்ளி:
ஜூனியர் பெண்களுக்கான 10 மீட்டர், ‘ஏர் பிஸ்டல்’ தனிநபர் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஈஷா சிங், 570.20 புள்ளிகளுடன் 6 வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார்.
பைனலில் அசத்திய ஈஷா சிங், 236.6 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இதுவரை 9 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட 22 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.