ஹிமா தாஸ் 4வது தங்கம் வென்றார்

செக்குடியரசில், சர்வதேச தடகள போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 23.25 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த இந்தியாவின் ஹிமா தாஸ், தங்கம் வென்றார். இது, கடந்த 15 நாட்களில் இவர் கைப்பற்றிய 4வது தங்கப்பதக்கம். சமீபத்தில் போலந்தில் நடந்த இரு வேறு தொடர்களில் (ஜூலை 2,8) தலா ஒரு தங்கம் வென்றிருந்த இவர், செக்குடியரசில் உள்ள கிளாட்னோவில் (ஜூலை 13) நடந்த தடகள போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனை வி.கே. வைஸ்மயா (23.43 வினாடி), 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.

ஆண்களுக்கான 400 மீட்டர், ஓட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் முகமது அனாஸ், பந்தய தூரத்தை 45.40 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.