ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ரயில்வே துறையில் வேலை வழங்க லாலுவும் அவரது குடும்பத்தினரும் சுமார் 4 ஆயிரம் பேரிடம் நிலங்களை லஞ்சமாக பெற்றனர். இதில், ரூ. 600 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இது தொடர்பாக கடந்த ஆண்டில் இருமுறை லாலு, அவரது உறவினர்கள், நண்பர்கள், கட்சிப் பிரமுகர்கள் வீடுகளில் சி.பி.ஐ சோதனை நடத்தியது. இந்த சூழலில், இந்த வழக்கு தொடர்பாக டெல்லி, பிஹாரில் 9 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் மீண்டும் தற்போது சோதனை நடத்தியுள்ளனர். இதில், பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.