ஆயுதப்படைகளின் சுப்ரீம் கமாண்டரான குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, வீர, தீரச்செயல்களுக்கான 37 விருதுகளை வழங்கினார். பாதுகாப்பு விருதுகள் வழங்கும் முதல்கட்ட விழாவில் அவர் இந்த விருதுகளை வழங்கினார். ஆயுதப்படைகள், மத்திய ஆயுதப்படைகள் மற்றும் மாநில, யூனியன் பிரதேசத்தின் காவல்துறையினருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. துணிச்சல், தைரியம் மற்றும் கடமையில் அதீத பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தியதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. மரணத்திற்குப் பிந்தைய ஐந்து விருதுகள் உட்பட எட்டு கீர்த்திச் சக்ரா விருதுகளும், மரணத்திற்குப் பிந்தைய ஐந்து விருதுகள் உட்பட 29 சௌர்ய சக்கரா விருதுகளும் முதல்கட்டமாக வழங்கப்பட்டன.