ஏப்ரல் 29 அன்று காலிஸ்தானி பிரிவினைவாதிகள், லண்டனில் உள்ள பாரதத் தூதரக அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், அவர்களது அழைப்பை ஏற்று போராட்டத்திற்கு யாரும் வராததால் பிரிவியனிவாதிகள் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளானார்கள். முன்னந்தாக, சுதந்திர நம்பிக்கை ஆலோசகரான கொலின் ப்ளூம் சமர்ப்பித்த அறிக்கையில் அவர் “சீக்கிய பயங்கரவாதம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு காலிஸ்தானிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காலிஸ்தானி பிரிவினைவாதிகள், பல்வேறு சமூக ஊடக தளங்களில் ஏப்ரல் 29 அன்று போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், யாரும் வரவில்லை. ஊடக நிறுவனத்திடம் பேசிய இங்கிலாந்து காவலர்கள், பாரதத் தூதரகத்துக்கு வெளியே போராட்டங்களை நடத்த அவர்கள் திட்டமிட்டதையடுத்து பாதுகாப்புக்காக காவலர்கள் நிறுத்தப்பட்டனர், தொடர்ந்து ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்தத் தேவையான வாகனங்கள் உட்பட் அனைத்தும் தயாராக இருந்தன. ஆனால் போராட்டக்காரர்கள் வரவேயில்லை என்றனர். இதுகுறித்து இங்கிலந்தில் பத்திரிகை ஊடகத்திடம் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “காலிஸ்தானிகள், குரு நானக்கின் போதனைகளைப் பற்றி அறியாத மக்கள். இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான சீக்கிய சமூகத்தினர் இந்த பிரிவினைவாதிகளை அவர்களை ஆதரிக்கவில்லை. நாங்கள் அமைதியை விரும்பும் சமூகம், நாங்கள் பாரதத்தை நேசிக்கிறோம்” என்றார்.