அடுத்த நகைச்சுவை நாடகம்

சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவிவரும் சிக்கலான நிலை காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் பாரத மக்களை மீட்க மத்திய அரசு ‘ஆபரேஷன் காவேரி’ மீட்புப் பணியை துவக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இதில் பாரதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி இலங்கை உட்பட அண்டை நாடுகளுக்கும் பாரதம் உதவி வருகிறது. இந்த சூழலில், சூடானில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 400 பேரை மீட்க, மத்திய அரசுக்கு தமிழக அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிடத் தயார் நிலையில் இருப்பதாக கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே உக்ரைன் பிரச்சனையின் போது இதேபோல ஸ்டாலினும் தமிழக அமைச்சர்களும் செய்த நகைச்சுவை நாடகங்களை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை, ஸ்டாலின் இதற்கென ஒரு குழுவையும் கட்டுப்பாட்டு அறையையும் அமைத்தது, உக்ரைனில் இருந்து திரும்பியவர்களை விமான நிலையத்தில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, ஏதோ தாங்களே நேரில் சென்று போராடி மீட்டு வந்ததை போல நாடகமாடியது, மாணவர்கள், தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் பயணச் செலவுகள் அனைத்தையும் தமிழக அரசு ஏற்றதாக கூறியது என எதையும் நாங்கள் மறந்துவிடவில்லை என சமூக ஊடகங்களில் மக்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.