பஞ்சாப்பில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி அம்ரித்பால் சிங் வழக்கு தொடர்பாக இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அம்ரித்பால் சிங்குக்கு உதவிய நபர்கள் குறித்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் பஞ்சாப் காவல்துறையிடம் கோரியுள்ளது. சமீபத்தில் பஞ்சாப்பின் மோகாவில் இருந்து ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ர காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதை அடுத்து, பஞ்சாப் காவல்துறை இதுகுறித்த விரிவான அறிக்கையை மத்திய உள்துறையிடம் சமர்ப்பித்துள்ளது. அதில், தான் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக, கனடாவில் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணை மர்றவர்களை தொடர்பு கொள்ள அம்ரித்பால் சிங் பயன்படுத்தி வந்துள்ளார். அவரது நெருங்கிய உதவியாளர்கள். அவர் தனது சகாக்களுடன் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் அழைப்புகளை பயன்படுத்தியுள்ளார். அம்ரித்பால் சிங், தனது அலைபேசியில் எந்த சிம்மையும் பயன்படுத்தாமல், வாட்ஸ்அப்பில் கனடா எண்ணின் குறியீட்டை பயன்படுத்தி அதன் மூலம் தனது அலைபேசியை இயக்கிக்கொண்டிருந்தார், இதனால் தான் அவரை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, அம்ரித்பால் சிங் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை குழுவும் (என்.ஐ.ஏ) தனது அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. என்.ஐ.ஏ தனது அறிக்கையில் அம்ரித்பால் சிங்கிற்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உடனான தொடர்புகளை அம்பலப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர், பாகிஸ்தான் மற்றும் பிற வெளிநாட்டு பயங்கரவாதிகளுடன் வலுவான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாகவும், அவர் வேறு நாட்டிலிருந்து நிதி பெறுவதாகவும் அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.