இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது புகார்

அசாம் மாநில காங்கிரசின் இளைஞரணி தலைவியாக இருக்கும் அங்கித தத்தா. இளைஞரணி காங்கிரஸ் தலைவரான பி.வி. ஸ்ரீனிவாஸ் மீது, பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “கடந்த காலங்களில் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தும், எனது பாலின அடிப்படையில் வேற்றுமைப்படுத்தியும் வந்துள்ளார் பி.வி. ஸ்ரீனிவாஸ். இதுகுறித்து கட்சி தலைமையிடம் பல முறை கொண்டு செல்லப்பட்டும் அவர்கள் அதனை விசாரிக்கவில்லை. நான் 4 தலைமுறைகளாக காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். கட்சியின் உள்ளமைப்புகளில் 2 முறை போட்டியிட்டுள்ளேன். பூத் கமிட்டிகளையும் அமைத்துள்ளேன். கட்சிக்காக காவல்துறையிட அடி வாங்கியும் இருக்கிறேன். அரசியல் அறிவியல், எல்.எல்.பி. பி.ஹெச்.டி வரை படித்துள்ளேன். இவ்வளவு நடந்தும் கட்சி நலனுக்காகவே அமைதி காத்தேன். ஆனால், ஸ்ரீனிவாசின் துன்புறுத்தல் தொடர்கிறது. அது இன்னும் நிற்கவில்லை. கடந்த 6 மாதங்களாக ஸ்ரீனிவாஸ் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் வர்தன் யாதவ் ஆகியோர் தொடர்ச்சியாக என்னை துன்புறுத்தி வருகின்றனர். இதுபற்றி கட்சி தலைமைக்கு புகார் அளித்தும் இதுவரை எந்தவித விசாரணை கமிட்டியும் அவர்களுக்கு எதிராக அமைக்கப்படவில்லை” என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த பதிவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்டோரையும் அவர் டேக் செய்துள்ளார்.