ஹரியானா மாநிலத்தில் உலக ஹிந்து கல்வியாளர் சங்கத்தால் இரண்டு நாள் ஹிந்து கல்வியாளர்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மாநாட்டில், நான்கு முக்கியமான தலைப்புகளில் கவனம் செலுத்தப்பட்டது.
ஹிந்து, ஹிந்து மதம் மற்றும் ஹிந்துத்வா சொற்களின் விளக்கம்: ‘இந்த வார்த்தைகள், விதிமுறைகளில் குறிப்பிடத்தக்க குழப்பம் உள்ளது. மேலும் குறுகிய, பிளவுபடுத்தும் மற்றும் ஹிந்து எதிர்ப்பு வெறியை முன்னெடுப்பதற்காக, சுயநலம் கொண்ட நபர்களால் அவர்களின் வசதிக்கேற்ப விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. அறமில்லாத வெளிச்சத்தில் “ஹிந்துக்கள். ஹிந்து மதம் போன்ற என்ற சொற்கள் ஆங்கிலேயர்களால் காலனித்துவ ஆட்சியின்போது கூறப்பட்டாலும் கூட, “ஹிந்து” என்ற சொல் மிகவும் பழமையானது, பூர்வீகமானது, மரியாதைக்குரியது. மேலும் பாரதத்தில் வாழும் மக்கள், பாரதத்தின் பூர்வீக ஆன்மீக மரபுகளை பின்பற்றுபவர்களை குறிப்பிடுவதற்கு பொதுவான வார்த்தையாக பயன்படுத்தப்பட்டது. இந்த பொருளில் தான், கடந்த காலத்தில் பாரத மக்களும் மற்றும் வெளிநாட்டவர்களும் “ஹிந்து” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். இறுதியாக, “கிறிஸ்தவம்” என்ற சொல் கிறிஸ்தவ நம்பிக்கையின் முக்கிய சாரத்தைக் குறிப்பிடுவது போல, “ஹிந்துத்வா” என்ற சொல் ஹிந்துவாக இருப்பதன் சாரத்தைக் குறிக்கிறது. “ஹிந்து”, “ஹிந்து மதம்” மற்றும் “ஹிந்துத்வா” போன்ற சொற்களைப் பற்றிய புரிதல் வலுவான சான்றுகள் மற்றும் சரியான தர்க்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளது’ என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கல்வியாளர் சமூகத்தினரின் ஒருமித்த கருத்தாக இருந்தது.
ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து நாகரிகம் பற்றிய விவரிப்புகள்: இம்மாநாட்டில் கலந்துகொண்ட கல்வியாளர்கள், ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து நாகரிகம் தொடர்பான சமகால பாடங்கள் மற்றும் கதைகளின் தன்மை மீதும் கவனம் செலுத்தினர். இந்த பாடங்கள் மற்றும் கதைகளில் பெரும்பாலானவை எதிர்மறையானவை, திரிபுபடுத்தப்பட்டவை மற்றும் பொய்களை அடிப்படையாகக் கொண்டவை. இதற்கு அடிப்படையான, முதன்மைக் காரணம், இவை, ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் இயல்புடன் தொடர்புடையது. இவை பாரத தேசத்தவர் அல்லாதவர்களின் சித்தாந்தங்களின் ஆதரவாளர்களால் வடிவமைக்கப்பட்டது. அவர்களின் முயற்சிகளின் விளைவு என்னவென்றால், இதனால் பல உண்மைகளும் கூட, ‘கல்வியாளர்கள்’ என்ற முகமூடியுடன் திரியும் கருத்தியல்வாதிகளின் வலுப்படுத்தப்பட்ட தவறான கதைகளால் கடந்த சில தசாப்தங்களாக மாற்றப்பட்டுவிட்டன. எனவே, பள்ளிகள் முதல் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்கள் வரையிலான அனைத்து மட்டங்களிலும் மற்றும் சமூக அறிவியல், தாராளவாத கலைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்து அறிவுசார் துறைகளிலும் பாடத்திட்டங்கள் குறிப்பிடத்தக்க மதிப்பாய்வு செய்யப்பட்டு வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாத இத்தகைய தவறான கோட்பாடுகளை அகற்றுவதும் அவசியம். எங்களின் இந்த அணுகுமுறை பாரதத்தின் தேசிய குறிக்கோளுரை மற்றும் மற்றும் முண்டக உபநிஷத்தின் சொற்றொடரான ‘சத்யமேவ ஜெயதே’ என்ற சொற்றொடருடன் ஒத்துப்போகிறது.
பாரதிய மொழிகள் மற்றும் என்.இ.பி: புதிய தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி) பாரத மொழிகளின் பயன்பாட்டை சாத்தியமான அனைத்து வழிகளிலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலுவாக வலியுறுத்துகிறது. இந்த மாநாட்டில், நடைமுறை மற்றும் பயனுள்ள வழிகளில் அதை எவ்வாறு செய்யலாம் என்பது பற்றியும் நாங்கள் விவாதித்தோம். பாரதிய இலக்கியங்கள் மற்றும் ஒலிகள் மற்றும் டிஜிட்டல் மீடியா மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களின் இருப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது.
பாரதிய அறிவும் நிகழ்காலத் தொடர்பும்: இறுதியாக, பாரதம் மற்றும் உலகத்தின் தற்போதைய பிரச்சினைகளைத் தீர்க்க பாரதிய அறிவு அமைப்புப் பயன்படுத்தக்கூடிய பகுதிகளை ஆராய்வதற்கான குறிப்பிடத்தக்க விவாதமும் மாநாட்டில் நடத்தப்படுகிறது. இதைத்தவிர, 2024 ஜனவரியில் இது தொடர்பாக உலகளாவிய மாநாட்டை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.