சத்தீஸ்கரில் ஒரு லவ் ஜிஹாத் கொலை

சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சார்ஜு மார்க்கம் என்ற நபர் ஆட்டோ மெகானிக்காக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஆனா, அவர், தனக்கு திருமணம் ஆகவில்லை என பொய் கூறி அப்பகுதியைச் சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். சார்ஜு மார்க்கத்துக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளது தெரிந்ததால் அவரை விட்டு அஞ்சனா விலகியுள்ளார். அதற்கு உடன்பட மறுத்த சார்ஜு, இரண்டாவது மனைவியாக வைத்துக் கொள்வதாக கூறி அந்தப் பெண்ணை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், ரெங்காகர் கிராமத்தில் வசிக்கும் ஹேமந்த்ரா மராவி என்பவருடன் அஞ்சனாவுக்கு கடந்த மார்ச் 31ம் தேதி திருமணம் ஆனது. அந்தப் பெண்ணின் முன்னாள் காதலரான மார்க்கம், திருமணப் பரிசாக அந்த ப்ண்ணுக்கு சோனி 4.1 25000 பி.எம்.பி.ஓ ஹோம் தியேட்டரை வழங்கியுள்ளார். அதில் அவர், அம்மோனியம் நைட்ரேட் மற்றும் கன் பௌடர் உள்ளிட்ட வெடிபொருட்கள் சுமார் 2 கிலோவை நிரப்பி, அதனை மின்சாரத்தில் இணைக்கும்போது வெடிக்கும் வகையில் தயாரித்து வழங்கியுள்ளார். கல்யாணப் பரிசாக கிடைத்த ஹோம் தியேட்டரை பயன்படுத்த அதன் ஒயரை மின்சார பிளக்கில் சொருகிய போது அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், வீட்டின் கூரை, சுவர்கள் இடிந்து விழுந்தன. மேலும், புது மாப்பிளையான ஹேமந்த்ரா மராவி, அவரது சகோதர் மற்றும் இருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். அருகில் நின்று கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை உள்பட அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிசத்தம் அதிக தூரம் வரை கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்தனர். அந்த ஹோம் தியேட்டர் வாங்கப்பட்ட கடைக்காரர் அளித்த தகவலின் பேரில், சார்ஜு மார்க்கத்தின் சதி குறித்து அறிந்த காவல்துறையினர், மத்தியப் பிரதேசத்தில் பதுங்கியிருந்த சார்ஜு மார்க்கத்தை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் 2005ல் கல்குவாரியில் வேலை பார்த்தபோது, அங்கிருந்து வெடிமருந்துகளை திருடியதும் அதனைக் கொண்டு வெடிகுண்டு தயாரித்ததும் தெரியவந்தது.