பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவது முதல் கோயில் திருவிழாக்களில் காவிக்கொடிகளை வலுக்கட்டாயமாக தடை செய்வது வரை, தற்போது கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் உள்ள கேரளா, ஹிந்து எதிர்ப்புவெறி கொண்ட மாநிலமாக மாறியுள்ளது. கடவுளின் சொந்த பூமி எனக் கருதப்படும் கேரளாவில், இப்போது கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராகப் பேசினால் அல்லது பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசைப் புகழ்ந்தால், நீங்கள் ஒரு சங்கி மற்றும் வலதுசாரி என்று கருதப்படுகிறீர்கள். இந்த சூழலில், கம்யூனிஸ்ட்டுகளின் பாசிச அரசியல் செயல்பாடுகளுக்கு எதிராக ஹிந்துக்கள் எப்படி உறுதியாக நிற்க வேண்டும் என்பதற்கு சுஜயா பார்வதி ஒரு உண்மையான உத்வேகமாகவும் ஒரு பிரகாசமான உதாரணமாகவும் திகழ்கிறார். பிரபல மலையாள செய்தி ஆசிரியரும், ’24’ மலையாள செய்தி சேனலின் தொகுப்பாளருமான சுஜயா பார்வதி, சமீபத்தில் தனது பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணம், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சங்க பரிவாரத்துடன் இணைந்த தொழிற்சங்கமான பி.எம்.எஸ் (பாரதிய மஸ்தூர் சங்கம்) நடத்திய பெண்கள் மாநாட்டில் அவர் உரையாற்றியது தான் அவர் செய்த ஒரே தவறு.
இந்நிகழ்வில் அவர் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் வளர்ச்சிப்பணிகளை பாராட்டினார். இதற்கு முரண்பாடாக, 24 செய்தி சேனலின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகண்டன் நாயர், கடந்த காலங்களில் சி.ஐ.டி.யு மற்றும் பிற கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்த அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக யாரும் அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வளவு ஏன்? ஸ்ரீகண்டன் நாயர், தனது கடந்தகால பேட்டிகளில் கூட பிரதமர் மோடிக்கு எதிரான, பா.ஜ.க கூட்டணிக்கு எதிரான மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், சுஜயா பார்வதியின் இடைநீக்கம், கேரள மக்களுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து பி.எம்.எஸ் அமைப்பு உட்பட பல அமைப்பினரால் பேரணிகள் நடத்தப்பட்டன. இது 24 நியூஸ் நிர்வாகத்தை அதன் முந்தைய முடிவில் இருந்து பின்வாங்க வைத்தது. அவர்கள் அவரது இடைநீக்கத்தை ரத்து செய்து, மார்ச் 29ம் தேதி மீண்டும் சேருமாறு கூறினர். 24 நியூஸின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவரான கோகுலம் கோபாலன், அவரது இடைநீக்கத்தை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், தான் சொன்னதில் உறுதியாக இருப்பதாக காட்டுவதற்காகவும், மீண்டும் பணியில் இணைந்த சுஜயா பார்வதி, தனது முதல் செய்தி ஒளிபரப்பில் காவி உடை அணிந்திருந்தார். அதுமட்டுமல்லாமல், அன்றிரவே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அவர், தனது திட்டங்களைத் தெளிவாகக் கூறவில்லை என்றாலும், ஊடகத் துறையில் தொடர்ந்து இருப்பேன் என்று தெளிவுபடுத்தியுள்ளார். கம்யூனிஸ்ட்டுகளின் பாசிச அரசியல் செயல்பாடுகளுக்கு எதிராக ஹிந்துக்கள் எப்படி உறுதியாக நிற்க வேண்டும் என்பதற்கு சுஜயா பார்வதி ஒரு உண்மையான உத்வேகமாகவும் ஒரு பிரகாசமான உதாரணமாகவும் திகழ்கிறார்.