ஹிந்துக்களை பிரிக்க காங்கிரஸ் முயற்சி

காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆங்கிலேயர்களை போலவே மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் தான் எப்போதும் ஈடுபட்டு வருகின்றன, இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம் என்பது அரசியல்வாதிகள், பொதுமக்கள் ஆண்டாண்டு காலமாக வைத்து வரும் குற்றச்சாட்டு. அதனை மெய்பிக்கும் விதமாக சமீபத்தில், ‘பழங்குடியினர் ஹிந்துக்கள் அல்ல அவர்களுக்கென தனி மதக் குறியீடு தேவை’ என காங்கிரஸ் கூறியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியை விமர்சித்த பா.ஜ.க, ஹிந்து மதத்தின் பரந்த கருத்துகளை காங்கிரஸ் நிராகரிப்பதாகவும், ஹிந்துக்களை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியது. இந்த அபாயகரமான கோரிக்கையை வைத்த காங்கிரஸ் மாநில அமைச்சர் கவாசி லக்மாவின் அறிக்கைக்கு பா.ஜ.க பழங்குடியினர் பிரிவின் தலைவர் விகாஸ் மார்க்கம் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “இந்த கோரிக்கை துரதிர்ஷ்டவசமானது. அமைச்சர் லக்மாவின் கருத்தியல் சரிவு ஏமாற்றத்தை அளிக்கிறது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பாதங்களை வணங்கி முகஸ்துதி செய்வதன் மூலம் அவரது முன்னோர்களின் பாரம்பரியத்தை நிராகரிக்க வேண்டிய அரசியல் நிர்பந்தத்தை லக்மாவின் அறிக்கை பிரதிபலிக்கிறது. சத்தீஸ்கரில் ஹிந்துக்களை பிரிக்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சிக்கிறது. அமைச்சர் கவாசி லக்மா, இத்தகைய மோசமான நிகழ்ச்சி நிரலை அடிக்கடி ஊக்குவித்து வருகிறார். பஸ்தர் பகுதியில், காங்கிரஸ் அரசின் ஆதரவின் கீழ் மதமாற்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன” என கூறினார். மேலும், நாராயண்பூர் மற்றும் டோகாபால் சம்பவங்களை மேற்கோள் காட்டி, பழங்குடியினர் மீதான சமீபத்திய தாக்குதல்களுக்கு காங்கிரஸ் அரசையும் அதற்கு காரணமான கிறிஸ்தவ மிஷனரிகளையும் விமர்சித்தார். முதல்வர் பூபேஷ் பாகேலின் ‘ஹிந்துக்களை பிளவுபடுத்து’ உத்தியால் பழங்குடியினரும் பிற மக்களும் படிப்படியாக விழித்துக்கொண்டு வருகின்றனர். பழங்குடியின நாகரீகம் மற்றும் கலாச்சாரத்தை காங்கிரசால் அழிக்க முடியாது. ஹிந்துக்களை பிரிக்க முடியாது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.