இந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத் தலைவர் பி.பி ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அசாமை சேர்ந்த பத்ருதீன் அஜ்மல் என்ற இஸ்லாமிய கட்சி தலைவர், வரும் இருபது ஆண்டுகளில் பாரதத்தில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவோம் என்றும் அதற்கான பாதையை இஸ்லாமிய சமூகம் மிகத் தெளிவாக வகுத்து வைத்திருப்பதாகவும் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். நமது நாட்டில் சிறுபான்மையினராக இருந்த இஸ்லாமிய சமூகம் இன்றைக்கு பெரும்பான்மைக்கு நிகராக மக்கள் தொகையில் பெருகி இருக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள 766 மாவட்டங்களில் 200 மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினர்களாக மாறி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் பெருகி ஹிந்துக்கள் சிறுபான்மை ஆகி உள்ளனர்.
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் ஹிந்துக்கள் முழுமையாக கடைபிடிப்பதை போல முஸ்லிம்கள் கடைபிடிப்பதில்லை. ஆகவே கடந்த 20 ஆண்டுகளில் மக்கள் தொகை பெருவெடிப்பு என்ற நிலையில் இஸ்லாமியர் மக்கள் தொகை பெருகி உள்ளது. மேலும் நமக்கு தெரிந்த வகையில் ஹலால் என்பது இறைச்சி உணவு என்று இருந்த நிலையில், இருந்து தற்போது இறைச்சி அல்லாத மற்ற அனைத்து உணவு மற்றும் மசாலா பொருட்களுக்கும் கூட ஹலால் என்ற முத்திரை குத்த தொடங்கி விட்டார்கள். அந்த வகையில் ஹிந்துக்களுக்கு தொழில் ரீதியாக மிகப்பெரிய அடி விழுந்துள்ளது. ஹலால் வியாபாரத்தின் பின்புலம் அறியாத அப்பாவி ஹிந்துக்கள் தங்களின் உழைப்பை ஹலால் வியாபாரத்திற்கு இரையாக்கி இஸ்லாமிய அடிப்படை வாதம் தழைத்தோங்க மறைமுகமாக காரணமாக இருக்கிறார்கள். அதை கட்டுப்படுத்த அரசிடம் சட்டங்கள் திட்டங்கள் சிறிதும் இல்லை. மேலும் மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளில் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் எல்லாவிதமான மோசடிகளையும் பயன்படுத்தி இஸ்லாமியர்களை குறிப்பிட்ட அளவுக்கு பதவிகளில் அமர்த்தி விடுகிறார்கள். இட ஒதுக்கீடுகள் மூலமும் ஹிந்துக்களின் பணியிடங்கள் பறிக்கப்பட்டு இஸ்லாமிய வசம் ஆகிறது.
கல்வி நிறுவனங்கள் பணியிடங்கள் வியாபார தலங்கள் வீட்டு உபயோக பொருட்கள் ரிப்பேர் செய்யும் இடங்கள் போன்ற பல்வேறு வகைகளில் ஹிந்து பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மதம் மாற்றுவதும் மதம் மாற மறுப்பவர்களை தற்கொலை செய்ய தூண்டுவதும் அல்லது கசாப்பு கடை போல கொத்துக்கறி போடுவதும் தொடர் நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது. மியான்மரில் இருந்து கிளம்பிய ரோஹிங்கியர்கள் இன்றைக்கு நாட்டின் தென்கோடி கன்னியாகுமரி வரை வந்து ஆக்கிரமித்து இருக்கிறார்கள். கூடவே சட்ட விரோதமாக வங்க தேசத்தவர்கள், பாகிஸ்தானியர்கள் இவர்களை வெளியேற்ற மத்திய அரசு எடுக்கும் சட்ட நடவடிக்கைகளை, வாக்கு வங்கிக்காக தடுக்கும் மாநில கட்சிகள் என்ற நிலையில், அசாமை சேர்ந்த பத்ருதீன் அஜ்மல் என்ற இஸ்லாமிய கட்சி தலைவர் வரும் இருபது ஆண்டுகளில் பாரதத்தில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவோம் என்றும் அதற்கான பாதையை இஸ்லாமிய சமூகம் மிகத் தெளிவாக வகுத்து வைத்திருப்பதாகவும் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். இந்த பேச்சு ஏதோ அரசியல் காரணங்களுக்காக என்று அசட்டையாக எடுத்து கொள்ளமல் அந்த பேச்சின் உண்மை அர்த்தத்தையும் பெரும்பான்மை ஹிந்து சமூகம் எதிர்நோக்கியுள்ள ஆபத்தையும் தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை கருத்தில் கொண்டும் மத்திய, மாநில அரசுகள் தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்” என தெரிவித்துள்ளார்.