நடவடிக்கை எடுக்காத காவல்துறை

பா.ஜ.க. மூத்த தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான நேதாஜி, நாகை மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நாகப்பட்டினம் நகரம், காடம்பாடி புதிய கடற்கரை சாலையில் ’நம்பிக்கை குழந்தைகள் காப்பகம்’ இயங்கி வருகிறது இங்கு, காப்பகம் என்ற பெயரில் கிறிஸ்தவ மதமாற்றம் நடைபெற்று வருகிறது. ஒ.என்.ஜி.சி.யில் பணியாற்றி வரும் பரமேஸ்வரன் மற்றும் எல்.ஐ.சி.யில் பணிபுரிந்து வரும் சூடாமணி ஆகியோர் இதனை நடத்தி வருகின்றனர். அந்த காப்பகம், மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு தங்க வைக்கப்பட்ட 18 வயத்திற்கு குறைவான பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக பரமேஸ்வரன் தொந்தரவு செய்துள்ளார். அதையடுத்து, அந்த தொண்டு நிறுவனத்திலிருந்த பெண் மற்றும் அவரது பெற்றோர், 20 நாட்களுக்கு முன்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரமேஸ்வரன் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளனர். புகார் கொடுத்த பல நாட்களுக்கு பிறகே (23.2.2023) காவல்துறையினர் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் மேலேட்டமாக வழக்கு பதிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. மேலும் அவரை காவல்துறையினர் கைது செய்யாமல், நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமேஸ்வரனுடைய உறவினர்கள் காவல்துறையில் மிக உயரிய பொறுப்பில் உள்ளதால் அவரை கைது செய்யாமல் தப்பிக்க விட்டதாக கூறப்படுகிறது. குழந்தைகள் காப்பாகம் என்ற பெயரில் பாலியல் தொந்தரவு கொடுக்கும் தொண்டு நிறுவனங்கள் மீது பாரபட்சமில்லாமல் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.