நிதிஷ் குமாருக்கு என்ன நேர்ந்தது?

நிதிஷ் குமார் குறித்து ஊடக நிறுவனம் ஒன்றிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத், “பீகார் மாநிலத்தை தன்னால் நிர்வகிக்க முடியாத நிலையில், தன்னைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு நிதிஷ் குமார் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால், அது நிதிஷ் குமாராக இருந்தாலும் சரி, வேறு எந்தத் தலைவராக இருந்தாலும் சரி, பிரதமர் மோடியின் தலைமையில் நாடு குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியிருக்கிறது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாடு மாறிவிட்டது. நாட்டு மக்கள் மாறிவிட்டனர். பிரதமர் மோடி மற்றும் அவரது தலைமை மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால், நிதிஷ் குமாரால் அரசியல் நம்பகத்தன்மையை உருவாக்க முடியவில்லை. அவருக்கு என்ன நேர்ந்தது? அவரால் பீகார் மாநிலத்தை கூட கையாள முடியவில்லை, மாநிலம் கடும் சிக்கலில் இருக்கிறது, கட்சியிலும் குழப்பம் உள்ளது. கூட்டணி வைத்த காங்கிரசும் அவருக்கு எந்த முன்னேற்றமும் கொடுக்கவில்லை. நிதிஷ் குமார் ஜி, நீங்கள் தேவகவுடா அல்லது ஐ.கே குஜ்ரால் போன்றவர்களை போல ஆக விரும்புகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.