சத்ரபதி சிவாஜியை அவமதித்த கம்யூனிஸ்ட்டுகள்

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்தநாளன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (ஜே.என்.யு) மாணவர் செயல்பாடு மையத்தின் சுவரில் வைக்கப்பட்டிருந்த சிவாஜியின் உருவப்படத்தை இடதுசாரி ஆதரவு மாணவர் அமைப்பு சேதப்படுத்தியதாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) குற்றம் சாட்டியது. “இன்று சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்தநாள். மாணவர் செயற்பாட்டு மையத்தின் வெளிப்புறச் சுவற்றில் அவரது உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியிருந்தோம். ஆனால் ஜே.என்.யுவின் கம்யூனிஸ்டுகளால் இதை ஜீரணிக்க முடியவில்லை. ‘100 மலர்கள் குழு’ மற்றும் எஸ்.எப்.ஐ உறுப்பினர்கள் வந்து சிவாஜி மகாராஜின் உருவப்படத்தை சேதப்படுத்தினர்,” என்று ஏ.பி.வி.பி அமைப்பின் ஜே.என்.யு செயலாளர் உமேஷ் சந்திரா அஜ்மேரா கூறினார். மேலும், சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் “சட்டவிரோத தொழிலாளர்கள்” (வெளிநாட்டினர்) என்றும் அனுமதியின்றி கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.