கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை பராமரிப்பதை நோக்கமாகக் கொண்ட சேவா பாரதியின் டெல்லி பிரிவின் மாத்ரிச்சாயா அமைப்பு, குழந்தைகள் இல்லாத தம்பதிகள் கைவிடப்பட்ட குழந்தையை சரியான சட்ட நடைமுறை மூலம் தத்தெடுக்க வெற்றிகரமாக வழி வகுத்துள்ளது. கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு தங்குமிடம் வழங்குவதிலும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தத்தெடுப்பதில் உதவுவதிலும் மாத்ரிச்சாயா முக்கிய பங்காற்றியுள்ளது. கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு இல்லம் வழங்குவது சேவாபாரதியின் இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். இப்படிப்பட்ட ஒரு தத்தெடுப்பு விழாவில், ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு 6 மாத குழந்தை ஒன்று தத்து கொடுக்கப்பட்டது. இந்த மங்களகரமான தத்தெடுப்பு விழாவில், மியான்வாலி நகர காவல் அதிகாரி டி.கே சுக்லா, தொழிலதிபர் குல்தீப் கோஹ்லி, மற்றும் சேவாபாரதி டெல்லி துணைத் தலைவர் சஞ்சய் ஜிண்டால் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். 2002ம் ஆண்டு முதல் செயல்பாட்டில், மருத்துவமனைகள், காவல் நிலையங்களில் கைவிடப்பட்ட மற்றும் தங்களைத் தற்காத்துக் கொள்ள விடப்பட்ட ஏராளமான குழந்தைகளுக்கு மாத்ரிச்சாயா ஒரு இல்லமாக உள்ளது. தொடங்கப்பட்டதில் இருந்து, 353 கைவிடப்பட்ட குழந்தைகளை பல்வேறு குடும்பங்கள் தத்தெடுத்துள்ளன. அவ்வகையில், ஆதரவற்ற குழந்தைகளின் மறுவாழ்வில் மாத்ரிச்சாயா ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது.
காணாமல் போன குழந்தைகளின் பெற்றோரைக் கண்டுபிடித்து அவர்களிடம் குழந்தைகளை ஒப்படைப்பதிலும், பெற்றோரிடமிருந்து பிரிந்த குழந்தைகளை மீண்டும் ஒன்று சேர்ப்பதிலும் சேவாபாரதி உதவியிருக்கிறது. சேவாபாரதியின் தன்னம்பிக்கை மற்றும் தன்நலமில்லாத இந்த மனப்பான்மை காரணமாக இதுவரை 52 குழந்தைகள் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைந்துள்ளனர். இதைத்தவிர, சேவாபாரதி பல்வேறு அனாதை இல்லங்களுக்கு கைவிடப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்கும் உதவுகிறது. 6 வயதுக்கு குறைவான வயது வரம்பு மற்றும் பிற மருத்துவ மற்றும் சுகாதார பிரச்சினைகளால் 30 குழந்தைகள் மாத்ரிச்சாயாவிலிருந்து மற்ற அனாதை இல்லங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான சுகாதாரம், தங்குமிடம், உடை, கல்வி ஆகியவை 100 சதவீதம் சமூகத்தின் நன்கொடையால் மட்டுமே செயல்படுகிறது. இந்த நன்கொடைகள், பணம், உடை, சுகாதாரப் பொருட்கள், புத்தகங்கள் போன்ற அன்றாடப் பொருட்களாகவும் பெறப்படுகிறது. மாத்ரிச்சாயா வளாகம், உள்ளூரைச் சுற்றியுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கான “ஷிஷு வாடிகா” என்ற சிறிய கல்வி மையமாகவும் செயல்படுகிறது. தோராயமாக 40 குழந்தைகள் வகுப்புகளில் கலந்துகொண்டு கல்வியைப் பெறுகிறார்கள். இது சமூகத்தில் நல்ல கலாச்சார விழுமியங்களையும் சேவை உணர்வையும் நலனையும் வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.