கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த தி.மு.க. கவுன்சிலரான சின்னசாமி, நாகோஜனஹள்ளி பேரூராட்சியில் கவுன்சிலராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த மாதையன் என்ப்வரின் மகன்களான பிரபாகரன், அவரது தம்பி பிரபு ஆகிய இருவரும் ராணுவ வீரர்கள். குடிநீர் பிடிக்கும் இடத்தில் துணி துவைத்ததால் பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது மகன் உள்பட 9 குண்டர்கள் அந்த ராணுவ வீரர்களின் வீட்டுக்கு வந்து மாதையன் குடும்பத்தினரை தாக்கினர். இதில் படுகாயமுற்ற பிரபு, கடந்த 14ம் தேதி சிகிச்சை பலனினின்றி உயிரிழந்தார். தி.மு.க. கவுன்சிலர் ராணுவ வீரரை கொலை செய்த அராஜக சம்பவம் தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த தி.மு.க கவுன்சிலர் சின்னசாமி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் காயமுற்ற பிரபாகர் அளித்த பேட்டியில், தி.மு.க கவுன்சிலர் பெரிய வாளுடன் வந்து எனது தந்தையை அவதூறாக பேசி தாக்கினார். பின்னர் கீழே தள்ளி விட்டு தாக்கினர். என்னையும் கடுமையகத் தாக்கினர். அப்போது அங்கு வந்த எனது சகோதரர் பிரபுவை அவர்கள் மிகக் கடுமையாகத் தாக்கினர். இதனால் அவர் உயிரிழந்தார். எனது சகோதரனை இழந்து விட்டேன்” என்று கூறினார். எனது மகனை கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ராணுவ வீரரின் தந்தை மாதையன் கோரியுள்ளார்.