பி.பி.சியில் வருமானவரி சோதனை

பி.பி.சி இந்தியா நிறுவனத்திற்கு எதிரான வருமானவரித் துறையினரின் சோதனை டெல்லி, மும்பையில் உள்ள பி.பி.சி அலுவலகங்களில் இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. அந்நிறுவனத்தின் நிதி ஆதாரங்கள், வரவு செலவுகள், சர்வதேச வரி விதிப்பு, பி.பி.சி துணை நிறுவனங்களின் பரிமாற்ற விலை தொடர்பான மின்னணு மற்றும் காகித ஆவணங்களை ஆய்வு செய்தனர். பி.பி.சியின் நிதித்துறை, வேறு சில குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த ஊழியர்களிடம் விசாரணை நடந்தினர். என்றபோதிலும் மற்றவர்களின் பணிகள் பாதிக்காமல் இருக்கும் வகையில், பிற ஊழியர்கள், பத்திரிக்கையாளர்களை வெளியேற அனுமதித்தனர். இந்த ஆய்வுகள் தொடர்பாக, வருமானவரித் துறையிடமிருந்து எந்த அதிகாரபூர்வ தகவல்கள் வரவில்லை. பி.பி.சி நிறுவனம் இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில், ‘டெல்லி, மும்பையில் உள்ள பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்’ என்று பதிவிட்டுள்ளது. இந்த சூழலில், கடந்த 2 நாட்களாக, 2002ல் நடந்த குஜராத் கலவரம் குறித்து சர்ச்சைக்க்குரிய வகையில் ஆவணப் படத்தை பி.பி.சி சமீபத்தில் வெளியிட்டதால் தான் இந்த நடவடிக்கை என மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு பேசி வருகின்றனர் எதிர் கட்சித் தலைவர்கள். அதே சமயம், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் பல காலமாக பாரதத்திற்கு எதிராகவும் அதன் நலன்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் பி.பி.சியை பாரதத்தில் மத்திய அரசு முடக்க வேண்டும் என பொதுமக்களும் பல்வேறு தேசியவாத அமைப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.