மௌலானாக்கள் கிளப்பும் சர்ச்சைகள்

பாரதத்தில் இஸ்லாமிய மௌலானாக்களின் சர்ச்சைக்குரிய அறிக்கைகள் ஓய்வதாகத் தெரியவில்லை. மௌலானா மதானி ஓம் என்ற பிரணவ மந்திரத்தை அல்லாவுடனும், மனுவை ஆதாமுடனும் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். தற்போது மௌலானா சாஜித் ரஷிதி தன் சார்பாக ஒரு புதிய கூற்றைக் கொண்டு வந்துள்ளார். அதில் முதல் மனிதரான ஹஸ்ரத் ஆதம் ஒரு முஸ்லிம் என்றும் அவர் கடவுளின் தூதர் என்றும் கூறுகிறார். மேலும், மௌலானா சாஜித் ரஷிதி கூறுகையில், அந்த முதல் மனிதர் அல்லாவை வணங்கினார். அவருக்குப் பிறகுதான் உலகம் முழுவதும் உருவானது. அகண்ட பாரதம் இருந்தபோது, அக்காலத்தில் இலங்கை, ஈரான், ஈராக் முதலானவை அனைத்தும் ஒன்றாக இருந்தன.. அப்போது அவர் ஹிந்துஸ்தான் என்ற இலங்கைக்கு வந்தார். நாங்கள் அவரை ஹஸ்ரத் ஆதம் என்று அழைக்கிறோம். மனுவும் ஹஸ்ரத் ஆதாமும் ஒன்றே. ஸ்ரீராமர் உட்பட அனைத்து கடவுள்களும் தெய்வங்களும் ஹஸ்ரத் ஆதம் என்று அழைக்கப்படுபவரின் வழித்தோன்றல்கள். அவர் குர்ஆனில் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளார். ஹஸ்ரத் ஆதம் ஏன் இவ்வுலகிற்கு வந்தார், எதற்காக இங்கு அனுப்பப்பட்டார், இந்த உலகில் அவருக்கு எப்படி குழந்தைகள் பிறந்தார்கள், எத்தனை முறை திருமணம் செய்து கொண்டார்கள், மற்றும் அனைத்தையும் பற்றி குரான் கூறுகிறது. இதுவே என் நம்பிக்கை. எனது நம்பிக்கையை எங்கு வேண்டுமானாலும் வெளிப்படுத்த முடியும். என்னைப் போன்றவர்கள் மத்தியில் அல்லது மற்றவர்கள் மத்தியில் நான் அதைச் சொல்ல முடியும். ஏனென்றால் அதற்கான உரிமையை அரசியலமைப்பு சட்டம் எனக்கு வழங்கியுள்ளது. இதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை. சமண தர்ம குருக்களோ அல்லது ஹிந்து தர்ம குருக்களோ அவரவர் நம்பிக்கையின்படி பேச ஆரம்பித்தால் என்ன நடக்கும்? இப்போதெல்லாம், ராமாயணம் (ராமசரித மானஸ்) பற்றி சில சர்ச்சைகள் வருகின்றன. அவை தவறானவை என்று பேசப்படுகிறது. ராமர் சீதையை விட்டு வெளியேறினார், அல்லது தந்தையின் கட்டளைப்படி அவர் காட்டிற்குச் சென்றார். இதைப் பற்றி நாங்கள் பேசவே இல்லை. ஏனென்றால் அது உங்கள் நம்பிக்கை. நாங்கள் எங்கள் நம்பிக்கையைப் பற்றி பேசுகிறோம். இந்த விஷயங்களில் சர்ச்சையை ஏற்படுத்துவது ஹிந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒன்று சேர்வதைத் தடுக்கும் மனநிலையாகும். ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான வெறுப்பு மேலும் வளர வேண்டும் என்பதற்காகவே இந்த சர்ச்சை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.