கேரளாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான மலப்புரத்தில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சவாப் என்ற முஸ்லிம் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான சம்பவம் கடந்த பிப்ரவரி 3ம் தேதி நடந்தது. பள்ளியின் கழிவறை அருகே ஆசிரியர் சிறுமியை பிடித்து அருகில் உள்ள புதருக்கு இழுத்து சென்றுள்ளார். சிறுமி அலறியதால் சவாப் சிறுமியை விடுவித்தார். பின்னர் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார். ஆசிரியரின் மிரட்டல் காரணமாக பயந்துபோன சிறுமி அடுத்த சில நாட்களுக்கு பள்ளிக்கு செல்லவில்லை. சிறுமி பள்ளிக்கு வந்தபோது, மற்றொரு ஆசிரியை சிறுமியிடம் இதுபற்றி கேட்டபோது, சிறுமி நடந்த விஷயத்தை கூறினார். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அறிந்ததும் தனது கைத்தொலைபேசியை அணைத்துவிட்டு தப்பியோட முயன்ற குற்றவாளி சவாப்பை சமயோசிதமாக செயல்பட்ட காவலர்கள் பிடித்து கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே மலப்புரத்தைச் சேர்ந்த முபாஷிர் என்பவர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி பிளஸ்டூ படிக்கும் 16 வயது பள்ளி மாணவி ஒருவரை லவ்ஜிஹாத் வலையில் சிக்க வைத்து பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். சிறுமியின் புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு விசாரணையின்போது, முபாஷிர் மீது ஜனவரி 2022ல் இதேபோன்ற மற்றொரு வழக்கும் உள்ளது, அதில் அவர் தற்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் தோழியையும் இதேபோல துன்புறுத்தியுள்ளார், அந்த வழக்கில் இருந்து சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டு வெளிவந்த முபாஷிர், தற்போது இந்த பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார் என்று காவல் துறையினர் கண்டறிந்தனர். இந்த சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பாக, இதே பகுதியில், 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால் தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் புலனாய்வு செய்த காவல்துறையினர், குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது அவரது உறவினரான முஹம்மது ரபீக் என்பதும் அவர் பலமுறை குழந்தையின் வீட்டிற்கு வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பதையும் கண்டறிந்தனர். இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.