15 சதவீதம் கூடுதல் கட்டணம்

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணம் அதீதமாக உயர்த்தப்பட்டது. இதில், சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, தாழ்வழுத்த தொழிற்சாலை 3பி என்னும் பட்டியல்படி வழங்கப்படும் மின்சாரத்தை பீக் ஹவர் எனப்படும் உச்சபட்ச தேவையுள்ள நேரத்தில் பயன்படுத்தினால், 25 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால், சாதாரண நேரத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 7.50 என்னும் கட்டணத்தில் பயன்படுத்தி வரும் இந்த நிறுவனங்கள், உச்சபட்ச நேரமாக வரையறுக்கப்பட்டுள்ள மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பயன்படுத்தும்போது 25 சதவீதம் கூடுதலாகக் கட்டணம் செலுத்தும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த கட்டணத்தை முழுவதுமாக நீக்க வேண்டும் என நிறுவனங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டன. பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு அதற்கு சிறிதும் செவி சாய்க்கவில்லை. இதனிடையே, தற்போது தாழ்வழுத்த தொழிற்சாலை 3பி பிரிவில் உச்சபட்ச நேரத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்தினால், 25 சதவீதத்துக்கு பதில் 15 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.