நிதி மோசடி வழக்கில் சாகேத் கோகலே

ராகுல் காந்தியின் நண்பரும் தற்போதைய மேற்கு வங்க மாநிலம் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான சாகேத் கோகலே, பொதுக் கூட்டங்கள், சமூக ஊடகங்கள் மூலம் வசூலிக்கும் நிதியில் முறைகேடுகள் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவரது செலவுகள், பங்கு வர்த்தகம், விருந்து உள்ளிட்ட எல்லாமே கணக்கு வழக்கின்றி மிக அதிகளவில் இருந்துள்ளது. இது தொடர்பாக குஜராத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டெல்லியில் அவரை கைது செய்தனர். இவரது வங்கி கணக்கில் கடந்த ஓராண்டில் 23.54 லட்ச ரூபாய் ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டது குறித்து கோகலேவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. தனது சமூக ஊடக பணிக்காகவும் இதர ஆலோசனை சேவைகளுக்காகவும் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான அலங்கார் சவாய் அந்த பணத்தை வழங்கியதாக சாகேத் தெரிவித்தார். இதுகுறித்து அலங்கார் சவாயிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவரோ தான் ரொக்கமாக எந்த பணமும் செலுத்தவில்லை என தெரிவித்துவிட்டார். இது குறித்து அகமதாபாத் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் இன்னும் பலரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் என கூறப்படுகிறது.