உ.பியில் ஒரு கட்டாய மதமாற்ற வழக்கு

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள குஜைனியில் உள்ள அம்பேத்கர் நகரில் ஒரு 18 வயதான ஹிந்து இளம்பெண், தனது பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு தனது வயதான பாட்டியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். யசோதா நகரில் உள்ள ஒரு பார்லரில் பணிபுரிந்து வந்த அவர், மூன்று மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் மூலம் முகமது ஷாநவாஸ் என்பவர் நட்பானார்.  டிசம்பர் 2022 ல், ஷாநவாஸ் அந்த இளம் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லக்னோவின் அலம்பாக்கில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் அந்த பெண்ணை தனது வீட்டிலேயே சிறைவைத்து அவரை முஸ்லிம்மாக மதம் மாறும்படி மிரட்டிவந்தார். ஜனவரி 3ம் தேதி அந்த பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் ஷாநவாஸ் அவரை பிடித்துவிட்டார். தப்பி ஓட முயன்றதால் ஆத்திரமடைந்த ஷாநவாஸ், அந்த பெண்ணை பெல்ட் மற்றும் கம்பியால் அடித்துத் துன்புறுத்தினார். அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஷாநவாஸின் வீட்டிற்கு ஓடி வந்தனர். தனது வீட்டிற்கு வெளியே கூட்டம் குவிவதைக் கண்ட ஷாநவாஸ் நல்லவர் போல நடித்து அந்த தீயை அணைத்துவிட்டு பென்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். நடந்த சம்பவத்தை குடும்பத்தினர் உட்பட யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என மிரட்டினார். இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண், ஷாநவாஸ் தூங்கிக்கொண்டிருந்தபோது தனது அத்தைக்கு போன் செய்து தனக்கு நேர்ந்த துயரத்தை பகிர்ந்து கொண்டார். தகவலறிந்து, மருத்துவமனைக்கு வந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக அந்த பெண்ணை அங்கிருந்து கான்பூருக்கு அழைத்துச்சென்று மருத்துவமனையில் சேர்ந்தனர். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட போது, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. அவரது முகம் மற்றும் மேல் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. அந்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து முகமது ஷாநவாசை தேடி வருகின்றனர்.