பயங்கரவாதி ஷாரிக்கை விசாரிக்க திட்டம்

கர்நாடக மாநிலம் மங்களூருவில் குக்கர் குண்டு வெடிப்பு மூலம் பயங்கரவாத சம்பவத்தை நிகழ்த்த முயன்ற முஸ்லிம் பயங்கரவாதி ஷாரிக், அந்த குக்கர் குண்டை ஆட்டோவில் எடுத்து சென்றபோது அது வெடித்து பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தான். இதனிடையே ஷாரிக்கின் அலைபேசியை ஆய்வு செய்த காவல்துறையினர், அவன் பயங்கரவாத அமைப்பை நிறுவ திட்டமிட்டு ஏராளமான இளைஞர்களை திரட்டி பயங்கரவாத பயிற்சி அளித்தது. காட்டில் தனது கூட்டாளிகளுடன் இணைந்து குண்டு வெடிப்பு நிகழ்த்தி பயிற்சி எடுத்தது, தமிழகம், கேரள உட்பட நாட்டின் பல இடங்களுக்கு பயணித்து முஸ்லிம் அடிப்படைவாதிகளை சந்தித்து ஆதரவு, பண உதவி திரட்டியது உள்ளிட்ட விவரங்களை திரட்டினர். இவ்வழக்கு பிறகு என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஷாரிக் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஷாரிக் தற்போது பூரண குணமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பயங்கரவாதி ஷாரிக்கை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.