திருவள்ளுரில் இன்று மாலை வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அந்த இடத்தில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நேற்று ஆய்வு செய்தார். அவர் அமர்வதற்கு நீண்ட நேரம் ஆகியும் நாற்காலியை யாரும் எடுத்து வரவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த ஆவடி நாசர், தகாத வார்த்தைகளால் கட்சி நிர்வாகிகளை திட்டியதோடு, கல்லைக் கொண்டும் எறிந்தார். நாற்காலி எடுத்து வரச் சென்றவர்கள் மீது, “போடா ஒரு சேர் எடுத்துட்டு வாடா” என்று கோபமாக பேசியபடி கல்லெறிந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.