மத்திய அரசு நிதியில் முறைகேடு

மேற்கு வங்க மாநிலத்தில் பேதுவதஹரி என்ற இடத்தில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.கவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, “மேற்கு வங்க மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி நிறுத்தப்பட்டு விட்டதாக திருணமூல் காங்கிரஸ் கட்சி கூறுகிறது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. உண்மையில், 100 நாள் வேலைத்திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் போன்றவற்றுக்கான மத்திய அரசு நிதியில் மேற்குவங்கத்தை ஆளும் திருணமூல் காங்கிரஸ் கட்சி முறைகேடுகளை செய்து வருகிறது. அதுபற்றிய தகவல் கிடைத்ததும் உண்மையை அறிய விசாரணை தொடங்கப்பட்டது. இதனையடுத்தே தற்போது மத்திய அரசு மீது வீண்பழி போடுகிறது திருணமூல் காங்கிரஸ் கட்சி. மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, அரசியல் சட்டத்துக்குட்பட்டு பணியாற்ற வேண்டும். இல்லாவிட்டால், மக்களின் கோபத்தை அவர் சந்திக்க நேரிடும். கொல்கத்தா உயர் நீதிமன்ரத்தின் சில தீர்ப்புகளுக்கு எதிராக திருணமூல் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்பததற்காக அவர்கள் போராடுவது வெட்கக்கேடான விஷயம்” என்று கூறினார்.