மகாராஷ்டிர மாநிலம் புனேவில் புதிய மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா, “ஒவ்வொரு நாடும் வளர்ந்து வரும் நமது பாரதத்தை தற்போது உற்று நோக்குகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் நமது கொரோனா கட்டுப்பாட்டு பணிகளும் மிகுந்த முக்கியத்தும் பெற்ற ஒன்றாக உள்ளது. நான் பல நாடுகளுக்கு சென்று வந்தேன். அதில், உலகின் பிற நாடுகளை விட பாரதத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் சிறப்பாக உள்ளதை அறிந்துகொண்டேன்” என கூறியுள்ளார்.