மோமின்பூர் வகுப்புவாத வன்முறை

கடந்த ஆண்டு அக்டோபர் 9ம் தேதி மேற்கு வங்க மாநிலம் மோமின்பூரில் நடைபெற்ற ஹிந்துக்கள் மீதான முஸ்லிம் மத அடிப்படைவாதிகளின் வகுப்புவாத வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வீடுகள் மற்றும் கடைகளை நாட்டு வெடிகுண்டுகள், பெட்ரோல் குண்டுகள் வீதிதாக்கு சேதப்படுத்தியது. செங்கற்கள், கற்கள், மரக் கட்டைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. சட்டவிரோதமாக ஒன்றுகூடி குற்றச் சதித்திட்டம் தீட்டியது. கொல்கத்தாவின் எக்பால்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்துறை அதிகாரிகளை உடல் ரீதியாக தாக்கியது, அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தியது. காவல்துறையினரை தங்கள் பணிகளைச் செய்வதை தடுத்தது. கலவரப் பகுதிகளில் காவல்துறையினரை நுழைய விடாமல் தடுத்ததது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளன.