மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டியில் கடந்த செவ்வாய்க்கிழமை, ஒரு 14 வயது பள்ளிச் சிறுவன், பள்ளி சீருடையுடன் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷங்களை எழுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிவாண்டி மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், 5 பெண்கள் உள்பட 19 பேரை கைது செய்தனர். சூழலை சீர்குலைத்ததாக அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கட்டணம் செலுத்தாததால், தனியார் பள்ளியில் சேர அனுமதிக்காததால், மாணவர்களும் அவர்களது பெற்றோரும், பிவாண்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சிறுவன் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” கோஷங்களை எழுப்பினான். முன்னதாக கடந்த செப்டம்பரில், பயங்கரவாத தொடர்புகள், செயல்பாடுகள், முறைகேடுகள் காரணமாக டு முழுவதும் உள்ள முக்கிய பி.எப்.ஐ நிர்வாகிகளின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் அதன் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புனே நகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது அந்த அமைப்பினர், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷங்களை எழுப்பினர் என்பது நினைவு கூரத்தக்கது.