தொழில்நுட்பத்துக்கான ஆண்டுகள்

தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக டிஜிட்டல் இந்தியா புதுமைக் கண்டுபிடிப்பு மையத்தை அரசு உருவாக்க உள்ளது என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் தமரசேரியில் 20 கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்தியில், ‘தொழில்நுட்பத்துறையில் வாய்ப்புகள்’ குறித்து அவர் உரையாற்றுகையில், ‘பிரதமர் நரேந்திர மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கவும் வளர்ச்சியில் அனைவரும் பங்கேற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடின உழைப்பும், திறமையும் மட்டுமே வெற்றியை நிர்ணயிப்பவை. வரும் 10 ஆண்டுகள் தொழில்நுட்பத்துக்கான ஆண்டுகள். இதில் நமது நாட்டின் இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளது’ என்று தெரிவித்தார்.