உண்மையை திரித்த தொலைக்காட்சித் தொடர்

மகாராஷ்டிராவை சேர்ந்த ஷ்ரத்தா வால்கரை லவ் ஜிஹாத் வலையில் வீழ்த்தி கொடூரமாக கொன்று 35 துண்டுகளாக வெட்டி டெல்லியின் பல பகுதிகளில் வீசியெறிந்தான் அஃப்தாப். இச்சம்பவம், நாட்டையே உலுக்கியது. அஃப்தாப் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டான். ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கு தற்போது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சோனி டிவியின் பிரபல கிரைம் டிவி தொடரான “கிரைம் பேட்ரோல்” இந்த கொடூரமான குற்றத்தை ஒரு தொடராக படமெடுத்து காட்சிப்படுத்தியது. ஆனால், அந்தத் தொடரின் தயாரிப்பாளர்கள் உண்மைகளை அந்தத் தொடரில் திரித்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட கொலைகாரனின் மத அடையாளங்களை அவர்கள் மாற்றி அமைத்துள்ளனர். இந்த எபிசோடில், அவர்கள் பாதிக்கப்பட்ட ஷ்ரத்தா வால்கரை ‘அன்னா பெர்னாண்டஸ்’ என்ற கிறிஸ்தவப் பெண்ணாக சித்தரித்தனர். அதே நேரத்தில் அவரது காதலன் அஃப்தாப் பூனாவல்லா ‘மிஹிர்’ ஆக சித்தரிக்கப்பட்டார். இத்துடன் அவர்கள் நிற்கவில்லை. சம்பந்தப்பட்ட இடங்களை மாற்றியுள்ளனர். அஃப்தாப் தனது காதலி ஷ்ரத்தாவுடன் வாழ்ந்தது, கொலை செய்தது டெல்லியில். ஆனால், இந்த சம்பவம் புனேவில் நடப்பதாக தொடரில் காட்டப்படுகிறது.