கேரளாவில் சிவகிரி மடத்தின் 90வது ஆண்டு புனிதப் பயணக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நாம் நமது நண்பர்களை மாற்ற முடியும். ஆனால், அண்டை நாடுகளை மாற்ற முடியாது. அதனால் நாம் எப்போதும் அண்டை நாடுகளுடன் நல்ல நட்பு ரீதியிலான உறவினை கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், அண்டை நாடுகளுடன் நட்புறவாக இருக்கிறோம் என கூறிக்கொண்டு பாரதம் ஒருபோதும் அதன் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளாது. தேசத்தின் பாதுகாப்புதான் நமக்கு முக்கியம். மத்திய அரசின் ‘சுய சார்பு பாரதம் திட்டம்’ கேரளத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குருவின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த சுயசார்பு பாரதத் திட்டத்தால் பாரதம் உலக அளவில் 5வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. நாட்டின் ராணுவமும் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு தேசத்தின் எல்லைகளைப் பாதுகாக்க கடினமாக உழைத்து வருகிறது. சிவகிரி மடத்தில் உள்ள துறவிகள் தேசத்தின் ஆத்மாவை பாதுகாத்து வருகின்றனர். அவர்களது சேவையை நான் பாராட்டுகிறேன்” என கூறினார்.