பாரதத்தின் வளர்ச்சி

பாரதத்தின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 6.8 சதவீதமாக வளர்ச்சி காணலாம், 2023ல் 7 சதவீத வளர்ச்சியடையலாம் 2024ம் நிதியாண்டில் 6.1 சதவீதமாக இருக்கலாம். என சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, வட்டி விகித உயர்வு, போர் பதற்றங்கள், உணவுப்பொருள் தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றம், பொருளாதார மந்தநிலை அச்சம், திடீர் கொரோனா பாரவல், வினியோக சங்கிலி பாதிப்புகள் என தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் பாரதப் பொருளாதாரம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு படிப்படியாக வளர்ச்சி காணலாம். மத்திய அரசு தொடர்ந்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இது மேற்கொண்டு புதிய மூலதன முதலீடுகளை ஊக்குவிக்கலாம். தனியார் தேவையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.